மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு மிகவும் பொருத்தமானவரிடம் இருக்கின்றது-முதலமைச்சர்

தலவாக்கலை பி.கேதீஸ்-

த்திய மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு மிகவும் பொருத்தமானவரிடம் இருக்கின்றது.மத்திய மாகாணத்தில் என்னிடம் இருந்த தமிழ் கல்வி அமைச்சை அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரனிடம் வழங்கியதன் பயனை இன்று கண் ஊடாக காண்கின்றேன் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா சினிசிட்டா நகரசபை மண்டபத்தில் நடைப்பெற்ற மத்திய மாகாண சாகித்திய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு மத்திய மாகாண விவசாய,கல்வி மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
மத்திய மாகாணத்தில் என்வசம் இருந்த தமிழ் கல்வி அமைச்சை அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரனுக்கு வழங்கினேன் அதன் பயனாக மத்திய மாகாணத்தில் கல்வி,கலை,கலாசாரம் ஆகியன வளர்ச்சி அடைந்திருப்பதை காணமுடிகின்றது.

இங்கு இன்று இடம்பெற்ற நிகழ்வுகளை பார்க்கும்போது பாடசாலை மாணவ மாணவிகளின் கலை கலாச்சார,கல்வி நிலை வளர்ச்சியடைந்திருப்பதை காணமுடிகின்றது. நாட்டில் ஒரு சிறந்த பிரஜையாக வரவேண்டுமானால் சிறுவயதிலிருந்தே கல்வி மற்றும் கலை கலாச்சாரங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.அதேபோல் சிறுவயதிலிருந்தே சகல இன,மத,சிறுவர்களுடனும் பழகுவதன் மூலம் நாட்டில் இன,மத,பேதம் இருக்காது.இன்று இங்கு இடம்பெற்ற சாகித்திய விழாவும் இன,மத பேதங்களுக்கு அப்பால் ஒரு இன ஒற்றுமையை ஏற்படுத்தும் விழாவாக அமைந்துள்ளது.இது மாதிரியான விழாக்களை எதிர்காலத்திலும் நடத்துவதற்கு என்னால் முடிந்த உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -