Mohamed Nizous-
அற்புதமாய் அழகாய்
அசெம்பிள் ஆகி
கர்ப்பறையில் இருந்து
கச்சிதமாய் வெளி வரும்
தாய்ப்பால் என்ற
தரமான பெற்றோலில்
இரண்டு வருடங்கள்
இஞ்சின் இயங்கும்
கடைந்த சோறு என்ற
ஹைப்ரிட் சக்தியிலும்
ஒரு வருடம் முதல்
ஓடத் தொடங்கும்
பதினைந்து வருடங்கள்
பாக்டரி கண்டிஷனில்
எதுவும் கரைச்சலின்றி
இயல்பாய் இயங்கும்
அடுத்த பத்தாண்டுள்
ஆவேசமாய் ஓடி
நடுத்தெருவில் சில நேரம்
அடித்துக் கொள்ளும்
இருபத்தைந்தாண்டில்
இன்னுமொரு ட்ரைவர்
உம்மாவின் சீற்றில்
உட்கார்ந்து கொள்வார்
புதிய ட்ரைவர்
பொறுப்பெடுத்த பின்னால்
அதிலும் வண்டிகள்
அசெம்பிள் ஆகும்
நாற்பது வரைக்கும்
நன்றாய் இயங்கியது
பின்னர் இடைக்கிடை
பிரச்சினை கொடுக்கும்
பளபளப்பு மறையும்
பாட்ஸ்கள் தேயும்
எஞ்சினே சில நேரம்
இடையில் புளக் ஆகும்
கராஜில் காட்டி
கழற்றிப் பூட்டி
பெரிசா பிழை எனின்
பிற பாட்ஸ் இடப்படும்
எழுபதின் பின்னால்
எப்பவும் கராஜில்
விழுவதும் எடுப்பதுமாய்
வெறுத்துப் போகும்
கடைசியில் மெகானிக்
கை விட்டுப் போட
விடை தெரியாமல்
வெட்டியாய் நிற்கும்
இழுத்து இழுத்து
இயங்கிய வண்டி
முழுக்க ஒரு நாள்
மூச்சை அடக்கும்
பெ(f)ஸ்ட் ஓனர் அப்போது
பெரும்பாலும் இருக்கார்
இடையில் வந்த
இரண்டாம் ட்ரைவரும்
இன்னும் அசெம்பிளில்
இணைந்து கொண்டவையும்
புலம்பி அழுது
புதைத்துப் போடுவர்.