யு.எல்.எம். றியாஸ்-
பொத்துவில் உப கல்விவலயத்தில் நிலவும் ஆசிரியர் பர்ராக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்று பொத்துவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பர்ராக்குறை நிவர்த்தி செய்யக் கோரி 6 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து பொத்துவில் பிரதேச மக்களும், பொத்துவில் புத்தி ஜீவிகள் ஒன்றியமும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொத்துவில் உப கல்வி வலயத்தில் உள்ள 21 பாடசாலைகளில் கல்வி கற்பிக்க 436 ஆசிரியர்கள் தேவையாக உள்ளது ஆனால் 286 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர். இதில் குறித்த பாடத்துறை சார்ந்தவர்கள் பர்ராக்குறையாக உள்ளதாகவும் ஆர்ப்பாடுடத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இம்முறை க.பொ.தா சாதாரண தர பரீடசையை எதிர்கொள்ளும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை ஆசிரிய இடமாற்றங்கள் ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு முரணாக இடம்பெறுவதாகவும் அண்மையில் இவ் உப கல்வி வலயத்தில் 39 ஆசிரியர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
பொத்துவில் சந்தியில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பிரதான வீதி ஊடாக பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்று பிதேச செயலாளர் என்.எம்.எம். முஸர்ரத்திடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர். .