நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர் அவர் மேலும்தெரிவிக்கையில்...
தற்போதைய அரசாங்கமானது மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டத்தை மிக அவசரமாக கொண்டுவந்திருந்தது.ஒரு சட்டம்என்பது மிக நீண்ட கலந்துரையாடலின் பின் கொண்டுவரப்படல்வேண்டும்.அது ஒன்றுக்கு இரண்டு முறை கலந்துரையாடப்பட்டேஇறுதியில் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.அவ்வாறு எதுவும்இச் சட்ட மூலம் கொண்டுவரப்படும் போது பார்க்கப்படவில்லை.
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் ஒவ்வொரு மொழிப்பிரதியிலும் வெவ்வேறு கருத்துடைய வார்த்தைகள்உள்ளடக்கப்பட்டுள்ளன.சில இடங்களில் சில வார்த்தைகளேஇல்லை. இதுவே இச்சட்டத்தின் தரத்தை அறியபோதுமானதாகும்.சிங்கள மொழியில் கூறப்பட்டுள்ளதே சரியானவடிவம் என பாரம்பரியமாக கடைப்பிடித்து வரப்படும்சட்டத்துக்கு இத் திருத்தத்திலேயே வேலை வந்துள்ளது.
பொதுவாக வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவர்கள் சிங்கள மொழிஅறிவு குறைந்தவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எவ்வாறு இச்சட்டங்களை விளங்கி கொள்வது.அவர்கள் இச் சட்டத்தைதெளிவாக அறிய சிங்களம் படிக்க வேண்டும்.இது சாத்தியமா?ஏன் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் கூட சிங்களமொழி மூலத்தை விளங்க முடியாதவர்கள் உள்ளனர்.
மொழி மூல வரைபுகளில் உள்ள மாற்றங்கள் மக்களைஏமாற்றுவதற்கான செயலாகவுமிருக்கலாமென நம்பப்படுகிறது.சட்டங்களில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான விளையாட்டுக்கள்பாரிய ஆபத்துக்களை தோற்றுவிக்கும் என்பதைஇவ்வாட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர்குறிப்பிட்டுள்ளார்.