தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றத்தால் அட்டனில் பதற்றம்




நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-


ட்டன் தொன்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்படமையினால் அப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது

மலையக புதிய கிராமங்கள் உட்டகட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவித்தி அமைச்சின் கீழ் உள்ள தொழிற்பயீற்சி நிலையமானது பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையமாக பெயர்மாற்றப்பட்டுள்ளது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெயர் பலகையை மாற்றக்கோரியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர் 25.10.2017. மாலை எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

ஆர்பாட்டத்தினால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் சம்பவயிடத்திற்கு சென்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் சென்றதனால் பதற்ற நிலை தோன்றியது

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக பொலிஸார் அறிவித்கையடுத்து பொலிஸாரின் வேண்டுகோளுக்கினங்க ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்

எனினும் சம்பவயிட்டத்திற்கு இடத்திற்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ ஸ்ரீ தரன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களும் சென்றமையினால் அங்கு பதற்ற நிலை தோன்றியதுடன்

சம்பவம் தொடர்பில் ஸ்ரீதரன் அவர்களினால் அட்டன் பொலிஸ் நிலைய பொருப்திகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு பாதுகாப்பையும் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்னர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -