ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ வாஷித், பொத்துவில்; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த குமார, அல்-அக்ஸா வித்தியாலய அதிபர் ஏ.ஜே.எம். கரீம், செங்காமம் அல்-மினா வித்தியாலய அதிபர் என்.ரி. ராசுதீன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அல்-அக்ஸா வித்தியாலய அதிபர் .ஜே.எம். கரீம் மற்றும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ வாஷித் ஆகியோர் விடுத்த வேண்டுகோலை ஏற்று குறித்த பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் இதன்போது உறுதியளித்தார். அத்தோடு அப்பாடசாலையின் ஆராதனை மண்டபத்தையும் புணர்நிர்மானம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் இதன்போது உரையாற்றுகையில் தெரிவித்தார்.