முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பகிரங்க விவாகத்திற்கு தயார்- அனுர குமார திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் என்நேரத்திலும் பகிரங்க விவாகத்திற்கு செல்லத் தயார் என மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற பேரணி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

“புதிய அரசமைப்பின் மூலம் நாடு துண்டாடப்படுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் பிரதான காரணம் என சிலர் விமர்சிக்கின்றனர். நாட்டை துண்டாட வேண்டிய அவசியம் எமக்கில்லை.

இது தொடர்பில் விவாதம் நடத்த நாம் தயாராகவே உள்ளோம். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். நாம் அதனை விரைவில் மக்களுக்கு எடுத்துச் செல்வோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எம்மீது சுமத்தும் குற்றங்கெளுக்கெல்லாம் பதிலடி கொடுக்க நாம் தயாராகவுள்ளோம்“ என்றார்.(சுடரொளி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -