ஐ. எஸ். முகம்மட் சம்மாந்துறை-
சிரேஷ்ட முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் இன்று தனது முகநூலில் செய்தியொன்றை பதிவு செய்துள்ளார்.
இச்செய்தி தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இவரின் தகவல் தொடர்பில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தங்களது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துள்ளதை அறிய முடிகின்றது.
எதிர்வரும் நாட்களில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவரின் செய்தி, முஸ்லிம் அரசியல் வாதிகளின் காய் நகர்த்தல்களை சூடுபிடிக்க வைத்துள்ளது.
அந்த முஸ்லிம் ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவிட்ட செய்தி இதுதான் 'மு.காவின் தவிசாளராகிறாரா சேகு இஸ்ஸதீன்?' என்பதே ஆகும்.
இச் செய்தியை இவர் எவ்வித உண்மையுமின்றி பதிவு செய்திருக்க மாட்டார் என்பதனால் இச் செய்தி தொடர்பில் அரசியல் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் தங்களது புலனாய்வை முடக்கிவிட்டுள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியாக நான் வேதாந்தியை தொடர்பு கொண்டு கேட்ட போது ' அவ்வாறான அழைப்புக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடமிருந்து எனக்கு வரவில்லை. தான் தற்போது முஸ்லிம்களின் தீர்வுப் பொதி தொடர்பில் ஒரு ஆவணம் ஒன்றை தயார் செய்து வருகின்றேன். ஆனால் வடக்கு கிழக்கு தெடர்பில் ரவூப் ஹக்கீமும் எனது நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்.
இது முஸ்லிம்களின் தீர்வு தொடர்பான விடயம் என்பதனால் அவ்வாறான அழைப்பு மு.கா தலைமையிடமிருந்து வந்தால் கொள்கை ரீதியாகவும் முஸ்லிம்களின் தீர்வு தொடர்பிலும் ஆராயலாம்' என்றார். அவரின் கருத்தானது மறைமுகமாக கிரீன் சிக்னல் கொடுத்தது போன்ற அமைந்திருந்தது.
முகா தலைவரிடமிருந்து தனக்கு அழைப்பு வரவில்லையென வேதாந்தி தெரிவித்திருக்கும் நிலையில் அந்த முஸ்லிம் ஊடகவியலாளர் வெறுமன எவ்வித உண்மையுமின்றி இந்த தகவலை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்.
அந்த முஸ்லிம் ஊடகவியலாளரின் கருத்துக்கு வலுச் சேர்ப்பதாக சில நகர்வுகள் அண்மையில் நடைபெற்றுள்ளதாக அறியவருகின்றது.
அண்மையில் ரவூப் ஹக்கீமிற்கும் வேதாந்திக்கு மிடையில் பிரத்தியேக சந்திப்பொன்று கொழும்பில் இடம் பெற்றுள்ளது. அச்சந்திப்பானது இரகசியமாக தனிப்பட்ட ரீதியில் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
அதே போன்று நிந்தவூர் ஜப்பார் அலியின் மரண வீட்டுக்கு வேதாந்தி சென்றதாகவும் அங்கும் தலைவர் ரவூப் ஹக்கீமை எதிர்பாராதவிதமாக சந்தித்ததாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது.
இவற்றிற்கு மேலாக வேதாந்தியினால் கடந்த வாரம் எழுதப்பட்ட ' வடபுல முஸ்லிம்களையும் ஹக்கீமின் தனியலகும் உள்ளடக்குமா' என்ற கட்டுரை அனைவரினதும் வரவேற்பை பெற்றிருந்தது. இதன் உள்ளடக்கம் முஸ்லிம்களின் தீர்வுப் பொதியையும் ஹக்கீமின் ஆளுமையையும் பறைசாற்றியிருந்தது.
இவ்வாறு இருவருக்குமிடையில் உள்ளார்ந்த ரீதியாக ஒரு நட்பு ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அந்த முஸ்லிம் ஊடகவியலாளர் வேதாந்திக்கு தவிசாளர் பதவி எனும் தகவலை கேள்விக்குறியுடன் வெளியிட்டுள்ளார்.
உண்மையில் அவ்வாறு முகா தலைவர் ரவூப் ஹக்கீம் வேதாந்தியை தவிசாளராக கட்சிக்குள் உள்ளீர்க்கும் முடிவொன்றை எடுத்திருப்பாராக இருந்தால், அது வீழ்ச்சியில் அமிழ்ந்து கொண்டிருக்கும் முகாவை பாதுகாக்கவும், ஹக்கீமின் தலைமைத்துவத்தை பலப்படுத்தவும் ,முகா போராளிகளுக்கு பெரும் உந்து சக்தியாகவும், முஸ்லிம்களின் தீர்வுப் பொதியில் பல ஆக்கபூர்வமான நண்மைகளையும் பெற்றுத் தரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
எனினும் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் சிலரின் வேதாந்திக்கு எதிரான கெடுபிடிகளை தலைவர் ரவூப் ஹக்கீம் முறியடித்து தனது சாணக்கியத்தையும் ஆளுமையும் அவர் வெளிக்காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.