மத்திய அரசாங்கத்தில் ஒரு பிரதியமைச்சராக அமைச்சொன்றை வைத்திருக்கும் அமீர் அலி கிழக்கு மாகாண கல்வியியல் கல்லூரிகளில் கற்று வெளிமாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களை சொந்த மாகாணத்திற்கு பெற்றுக் கொடுக்க முடியாமல் முன்னாள் கிழக்கு முதல்வரின்செயற்றிறன் குறித்து பேசுவது வேடிக்கையாகவுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் லாஹிர் குறிப்பிட்டார்,
கிழக்கின் கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வெளிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்குகருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லாஹிர்
கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய வருடங்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களை சொந்தமாகாணத்திற்கு கொண்டு வருவதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கடுமையாக போராடி வெற்றிபெற்றார்,
தற்போது குறித்த ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கல்வி கற்பிக்கின்றனர்,
எமது மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகையில் எமது ஆசிரியர்களை வெளிமாகாணங்களுக்கு நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது ,
இந்த நியமனங்களை மத்திய அரசாங்கமே வழங்கியுள்ளது,அவ்வாறாயின் மத்தியரசாங்கத்தினால் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைமத்தியரசில் அமைச்சராய் உள்ளவர்களாலேயே தீர்க்க முடியாவிட்டால் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் இனி சிந்திக்க வேண்டியுள்ளது,
மத்தியரசில் அங்கம் வகித்தும் ஒரு சமூகப் பிரச்சினையை உரிய தலைமைகளுடன் பேசித் தீர்க்கும் ஆளுமை உங்களிடம் இல்லையென்பதை மக்கள் தற்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
இந்த கிழக்கு முதலமைச்சர் கிழக்கு மாகாணத்துக்கு இனி முதலமைச்சராய் வரக் கூடாது என அமீர் அலி தெரிவித்தாரென்றால் இதுவரை காலமும் அரசியலில் இருந்த உங்களால் செய்ய முடியாத கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களை சொந்த மாகாணத்தில் நியமிக்கும் சாதனையை அவரே நிலை நாட்டினார்.
மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கையில் சொந்த மாகாணத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கண்கலங்கி இருக்கையில் பாராமுகமாக இருக்கும் உங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் தரத்தையும் முன்னாள் கிழக்கு முதலமைச்சரின் பெறுமதியையும் மாாகணம்தற்போது உணர்ந்திருக்கின்றது.
ஆகவே மாகாண ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் திறனற்ற நீங்கள் அது ஒரு சுலபமான காரியம் என செய்து காட்டிய முன்னாள்கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீரிடம் ஆளுமையை கற்றுக் கொள்ளுங்கள்,
மக்கள் பணி செய்யும் அரசியல்வாதிகளை தூற்றி தமது இயலாமையை மறைக்க முடியும் என எண்ணிணால் அதனை நம்பி ஏமாறுவதற்கு மக்கள் இனியும் தயாரில்லை என்பதை நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்,
உண்மையைாக நீங்கள் ஆளுமையுள்ள ஆற்றலுள்ள அரசியல்வாதியாக இருந்தால் வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களை சொந்த மாகாணத்தில் நியமித்துக் காட்டுங்கள் என சவால் விடுப்பதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் லாஹிர்குறிப்பிட்டார்.