மக்கள் பிரதிநிதிகள் மக்களின் தேவைகளை கேட்டறிய நேரடியாக களத்துக்குச் செல்ல வேண்டும் -சிப்லி பாறூக்





பௌதீக ரீதியான அபிவிருத்திகளை மாத்திரமன்றி மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்ற வேண்டிய ஒரு முக்கிய தேவைப்பாடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு காணப்படுகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வறிய குடுபத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக இடியப்ப தொழிலுக்கான உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் என்பன வழங்கிவைக்கும் நிகழ்வு 2017.10.26ஆந்திகதி - வியாழக்கிழமை காத்தான்குடி பதுரியா சமூக சேவகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:

எமது பிரதேசமானது பொருளாதார தன்னிறைவுமிக்க ஒரு பிரதேசம் போன்று தோற்றமளித்தாலும் அதிகமான மக்கள் மிகவும் வறுமைக்கு மத்தியிலேயே தமது அன்றாட வாழ்க்கையினை நடாத்தி வருகின்றனர்.

எனவே மக்கள் பிரதிநிதிகள் வெறுமனே குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிவதற்கு மாற்றமாக மக்களிடம் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கண்டறிவதனூடாகவே அவர்களின் தேவைகளை உணர்வுபூர்வமாக அறிந்து செயலாற்ற முடியும்.

அந்த வகையில் நாங்கள் வீதிக்கு ஒருநாள் மற்றும் வீடுக்கு வீடு என்று மக்கள் குறை கேட்கும் பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு அதனூடாக வறிய நிலையிலுள்ள குடும்பங்களை இனங்கண்டு எங்களால் முடியமான உதவித்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

அதன் ஒரு கட்டமாக இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ள இவ்வாழ்வாதார உதவித்திட்டங்களைக் கொண்டு மக்கள் உரிய விதத்தில் பயனடைய வேண்டுமென்பதோடு வறிய குடும்பத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக மேலும் பல உதவித் திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம் எனவும் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தனது உரையில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -