ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலைபோன்று எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படகூடிய சாத்தியக்கூறுகள்.

மூன்றாவது தொடர்.......

ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலைபோன்று எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படகூடிய சாத்தியக்கூறுகள்.

இவ்வாறு புஷ்சினது கொள்கையினை பின்பற்றியவாறு தீவிரவாதத்தினை அழித்தல் என்ற ரீதியில் மியன்மாரில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்களை 969 இயக்கத்தினர் மிகவும் கொடூரமான முறையில் இனச்சுத்திகரிப்பு செய்தனர்.

அத்துடன் முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடியும், நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களை நிர்மூலமாக்கியும், நாட்டைவிட்டு விரட்டியும், மியன்மாரில் பாரிய இனச்சுத்திகரிப்பினை மேற்கொண்டு பல முஸ்லிம் கிராமங்களை முற்றாக அழித்துள்ளார்கள். இதற்கு இலங்கையிலுள்ள பௌத்தர்கள் இரக்கமின்றி வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதானது சிந்திக்க வேண்டியதாகும்.

இலங்கையில் பொதுபலசேனா இயக்கத்துடன், தீவிரவாதத்தினை அழிப்பதற்கான உடன்படிக்கையினை ஏற்படுத்தி, அதனை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பே மியன்மாரில் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு மேற்கொள்ளும் முயற்சியில் அசின் விராது தேரோ தலைமையிலான 969 இயக்கம் வெற்றிகண்டுள்ளது.

மியன்மாரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாக்குரிமை அற்றவர்களாக இருப்பதனால் ஆட்சி அதிகாரத்தில் அவர்களுக்கு எந்தவித செல்வாக்குகளும் இல்லை. அவர்களுக்காக பேசுவதற்கு அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ எவரும் இல்லாத நிலையில் அநாதரவான சமூகமாக அங்கு அவர்கள் காணப்படுகின்றார்கள்.

அங்குள்ள ஆட்சி முறையானது எந்தவிதத்திலும் முஸ்லிம்களின் தேவைப்பாடுகள் இருக்கவில்லை. அத்துடன் ஆட்சி அதிகாரத்தில் இராணுவத்தின் செல்வாக்குகள் அதிகமாக காணப்படுவதுடன், இராணுவத்தை பகைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாத நிலைமை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு உள்ளது.

ஆனால் அவ்வாறான அரசியல் சூழ்நிலை எமது நாட்டில் இல்லை. அதாவது முஸ்லிம்கள் தங்களது பேரம்பேசும் சக்திகள் மூலம் ஆட்சியில் பங்காளியாகவும், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்குகின்றார்கள்.

மியன்மார் நாட்டை போன்று இங்குள்ள சிங்கள இளைஞ்சர்களை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்புவதன் மூலம், வன்முறைகளை தோற்றுவிப்பதற்கு பொதுபலசேனா இயக்கம் அவ்வப்போது பலவித முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், அது அவர்களுக்கு வெற்றியளிக்கவில்லை.

இலங்கையில் விகிதாசார தேர்தல் முறைமையினால் பத்து சதவீதமாக வாழுகின்ற சிறுபான்மை முஸ்லிம்களின் ஆதரவின்றி மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற எந்தவொரு பெரும்பான்மை சிங்கள தேசிய கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாது.

பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரைக்கும் எப்படியாவது யுத்தத்தினை வெற்றிகொள்ள வேண்டும் என்றரீதியிலேயே அனைத்து சிங்கள தலைமைகளும் இருந்தன. மாறாக விகிதாசார தேர்தல் முறையினை மாற்ற வேண்டும் என்ற சிந்தனை எந்த கட்சியிடமும் இருக்கவில்லை. தமிழர்களின் இராணுவ பலத்தில் முஸ்லிம்களின் அரசியல் மறைந்துகொண்டு இருந்தது.

ஆனால் இன்று சிங்கள அரசாங்கத்தினை தட்டி கேற்பதற்குரிய எந்தவொரு பலமான சிறுபான்மை சக்திகளும் இலங்கையில் இல்லாத நிலையில், நாளுக்குநாள் புதுவகையான சட்டங்களை கொண்டுவருவதன் மூலம், முஸ்லிம்களுக்கு இருக்கின்ற அரசியல் பேரம்பேசும் சக்தியை அழிக்க முற்படுகின்றார்கள்.



தொடரும்..............
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -