பாறுக் ஷிஹான்-
இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் நான்காம் கட்டமானது இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தினால் வட மாகாணத்தின் வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இச் செயற்றிட்டத்தின் மூலம் இளம் அரங்கக் கலைஞர்கள் பன்மைத்துவ விழுமியங்களை அகவயப்படுத்தி ஊக்குவிப்பதற்கும், சிறுவர்களும் இளைஞர்களும் முரண்பாடுகளை அகிம்சை முறையில் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு தமது சுதந்திரமான பேச்சு, விமர்சன ரீதியிலான சிந்தனை மற்றும் புத்தாக்கத் திறன்களை வடிவமைத்துக்கொள்வதற்கும் உதவுவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.
வயதுவந்தோர், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் அகிம்சைக் கலாசாரத்தினையும் சகிப்புத்தன்மை, வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளல், வேறுபாடுகளுக்கு மதிப்பளித்தல், சமத்துவம், நீதி, சமூகப் பிரச்சினைகளைக் கையாளுதல், வன்முறையற்ற விதத்தில் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தல் போன்ற பன்மைத்துவ விழுமியங்களையும் ஊக்குவிப்பதை அது குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றது.
இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றமானது, இச்செயற்றிட்டத்தை அமுல்படுத்தும் பொருட்டு வட மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம் (வடக்கு), கட்புல மற்றும் அரங்கக் கலைகள் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது. மேலும் ளுனுதுகு இலங்கையிலுள்ள சிறுவர்களினதும் இளைஞர்களினதும் நலன்களுக்காகவென மக்கள் அரங்கமொன்றையும், அத்துடன் இளைஞர்களும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் பற்றிய கையேடொன்றையும் தயாரிப்பதற்காக 6 நிபுணர்களுடனும் கல்வியியலாளர்களுடனும் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.