எம்.ரீ. ஹைதர் அலி-
எமது சமூகத்திலுள்ள பெண்களுக்கு வெளி இடங்களுக்கு சென்று தஃவா நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றது.
என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி சித்திக்கிய்யா பெண்கள் கலாசாலைக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 2017.10.21ஆந்திகதி - சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஒலிபெருக்கி சாதனங்கள் கையளித்துவிட்டு உரையாற்றும்போதே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இருப்பினும் இத்தகைய கல்லூரிகள் மூலமாக அவ்வாறான குறைகள் நீக்கப்பட்டு பெண்கள் மார்க்கக்கல்வியினை முறையான விதத்தில் கற்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தங்களது திருமண வாழ்வுக்குப் பின்னர் பெண்கள் எந்தளவு தூரம் மார்க்கக் கல்வியினை கற்றுக்கொள்வதிலும் அதனை கற்றுக்கொடுப்பதிலும் ஆர்வம் செலுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
எனவே சமூகத்திலுள்ள அனைத்துப் பெண்களும் முறையான விதத்தில் மார்க்கக் கல்வியினை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென்பதோடு பெண்கள் தங்களால் முடியுமானவரை தஃவா பணிகளில் ஈடுபடவும் முன்வர வேண்டுமெனவும் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தனது உரையில் தெரிவித்தார். இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சுக் அஹமட் லெப்பை அவர்களும் கலந்துகொண்டார்.