மாணவி கர்ப்பம் என்று அவசரப்பட்டு பாடசாலையில் இருந்து நீக்கிய அதிபருக்கு எதிராக விசாரணை

நுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில், மாணவி ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறி அவரை பாடசாலையில் இருந்து நீக்குவதற்கு தீர்மானம் எடுத்த அதிபருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்ப்பாக சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரிடமிருந்து ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பத்தாம் தரத்தில் பயிலும் 15 வயதுடைய இந்த மாணவி பாடசாலையில் திடீரென வாந்தி எடுத்ததால், அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்து பாடசாலை அதிபர் அவரை பாடசாலையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பின்னர் குறித்த மாணவி தம்புள்ள வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் அவர் கர்ப்பமடையவில்லை என உறுதி செய்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த விதமான விசாரணைகளுமின்றி சம்பந்தப்பட்ட மாணவியை பாடசாலையிலிருந்து நீக்குவதற்கு அதிபர் எடுத்துள்ள தீர்மானம் குறித்து, மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பின்னர் இந்த மாணவிக்கு ஏற்பட்டுள்ள அநீதியை நிவர்த்தி செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை இந்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சம் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சர் அக்கிள விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.(DC)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -