அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஒக்டோபர் மாதக் கூட்டம்

அஷ்ரப்கான்-

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஒக்டோபர் மாதக் கூட்டம் எதிர்வரும் 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை இறக்காமம் மௌலானாமண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக பேரவையின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஸஹாப்தீன் தெரிவித்தார்.

பேரவையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசனம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாதாந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம். சஹாப்தீன், பொருளாளர் எம்.ஐ.எம். அஷ்ஹர் உள்ளிட்ட நிருவாகசபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, அங்கத்தவர்களின் எதிர்கால தொழிற்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளதுடன், பேரவையின் எதிர்காலநடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

எனவே இக்கூட்டத்திற்கு சகல அங்கத்துவ ஊடகவியலாளர்களும் தவறாது சமூகமளிக்குமாறு பேரவையின் செயலாளர் எம்.ஸஹாப்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -