மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் தரம் பத்தைச் சேர்ந்தஏ.ஜே.எல். அஸீல் பாத்திமா சபா என்பவர் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய மட்டஆங்கில தினப் போட்டியின் ஓர் அங்கமாக ஆங்கிலக் கூட்டெழுத்து எழுதலில் (Cursive writing) பாடசாலை மட்டத்திலும், கோட்ட மட்டத்திலும், மற்றும் மாகாண மட்டத்திலும்இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று 2017 ஆம் ஆண்டில் கொழும்பு தேஸ்டன்கல்லூரியில் இடம்பெற்ற தேசிய மட்ட ஆங்கில தினப்போட்டியில் அகில இலங்கைரீதியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று மருதமுனை அல் மனார்மத்திய கல்லூரிக்கும், கல்முனை கல்வி வலயத்திற்கும் தேசிய மட்டத்தில் பெருமைசேர்த்துள்ளார். இவர் எழுத்துப் பணிகளில் ஆர்வமுடையவரும் அத்துடன் ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் மருதமுனை ஏ.ஜே.எல்.அஸீல் (Rahumath service centre) மற்றும்
ஜே.தாஹிரா ஆகியோரின் மகளும்,மர்ஹூம் அல் ஹாஜ். ஏ.எம். ஏ ஜெலீல் மற்றும்ஜமாலியா ஆகியோரின் பேத்தியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக உழைத்த அல்மனார் மத்திய கல்லூரி அதிபர், ஆங்கில ஆசிரியர்கள் , கல்முனை கல்வி வலய ஆங்கிலஆலோசகர், ஆங்கில உதவி கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கும் பாராட்டுகளைதெரிவிக்கின்றனர்.