நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சந்திப்பு

பிரவ்ஸ்-








ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியுதவியில் நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசலின் உள்ளகம் மற்றும் முற்றத்தில் தரையோடுகள் (Tiles) பதிக்கப்பட்டமைக்கு நன்றிதெரிவிக்கும் வகையில்,  பள்ளிவாசல் நிர்வாகத்துக்கும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இன்று (14) சந்திப்பொன்று நடைபெற்றது.


தரையோடுகள் (Tiles) பதிப்பதற்கு உதவி செய்தமைக்காக தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், நற்பிட்டிமுனை சந்தையை அபிவிருத்தி செய்து தருமாறும், கலாசார மண்டபம் ஒன்றை அமைத்து தருமாறும்,  நற்பிட்டிமுனையிலிருந்து மருதமுனைக்கு பயணம் செய்வதற்கான வீதியொன்றை அமைத்து தருமாறும் இதன்போதும் கோரிக்கை விடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் அவற்றை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.


நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட,  நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் விளையாட்டுக்கழகங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில்,  கொந்தராத்துக்காரர் சார்பில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக,  அமைச்ர் ரவூப் ஹக்கீம் இன்று (14) மைதானத்துக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டார். மைதான அபிவிருத்தி தொடர்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டறியும் நோக்கில் குழுவொன்று அமைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -