மற்றும் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கெளரவ பிரதியமைச்சர் HMM. ஹரீஸ் ஆகியோர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது .
இந்த செய்தி உண்மையாயின் இதற்காக மேற்குறித்த அரசியல் தலைவர்களுக்கு கல்முனை மக்கள் சார்பாக கல்முனையன்ஸ் போரம் இத்தால் தன் நன்றி நவிலலை கூறிக்கொள்கிறது.
இருந்த போதிலும் நேற்று இவ்வாறான கூட்டம் எதுவும் இடம் பெற்றதாகவோ, தீர்மானமாக ஏதும் நிறைவேற்றப்பட்டதாகவோ சம்பந்தப்பட்ட அமைச்சர்களினால் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது .
மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2018 ஆண்டு ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். இது தவிர மேற்படி புதிய சபைகளை உருவாக்க உயர்மட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு மாவட்டக் குழுக்களுக்கு அனுப்பி அவர்களின் சிபாரிசைக் கோரியிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்படிவிடயம் தொடர்பாக பின்வரும் விடயங்களை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளினதும் பொதுமக்களினதும் கவனத்திற்கு கொண்டுவருவதோடு இழுத்தடிப்புகள், காலதாமதமின்றி மேற்படி சபைகளைப் பெற்றுக்கொள்ள ஆவன செய்யுமாறு கல்முனையன்ஸ் போரம் வேண்டிக்கொள்கிறது.
1.0 மேற்படி சபைகளின் உருவாக்கம் தொடர்பாக 1987ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. இந்தத் தீர்மானத்தினை அமுல் நடாத்தல் வேண்டும்.
" கல்முனைப் பட்டின சபைக்கு மாநகர சபையும், கரவாகு வடக்கு கிராம சபை மற்றும் கரவாகு தெற்கு கிராம சபை ஆகியவற்றுக்கு தலா நகர சபைகளும், கரவாகு மேற்கு கிராம சபைக்கு பிரதேச சபை ஒன்றையும் உருவாக்குதல் வேண்டும்."
2.0 நேரடியாக அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்விடயத்தை மேற்கொள்ளல். முடியாத பட்சத்தில் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று வர்த்தமானிப் பிரசுரம் மேற்கொள்ளல்.
3.0 மேற்படி சபைகள் உருவாக்கப்படும் வரை நடக்க இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தள்ளிப் போடுதல்.
மேலே குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்பதற்காக செயற்படும் சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து பிரதேச, இன, மத வேறுபாடுகள் பாராமல் பயணிக்க கல்முனையன்ஸ் போரம் தயாராகவிருக்கிறது.
Regards,
Mufaris M. Haniffa