குழந்தைகளுக்கு இன்று தேவைப்படுவது அன்பு- காரைதீவுக்கடற்கரையில் சிறுவர்தினக்கொண்டாட்டம்!





காரைதீவு நிருபர் சகா-

ர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலானந்த மொன்ரிசோரி பாலர் பாடசாலையினர் (1) ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவுக்கடற்கரையில் சிறுவர் தினக்கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக நடாத்தினர்.

பாடசாலை ஆசிரியைகளான ஜெயநிலந்தினி ரம்யா தலைமையில் நடைபெற்ற இச்சிறுவர் தினக்கொண்டாட்டத்தின்போது சிறுவர் விளையாட்டுக்கள் கடற்கரையில் மிகவும் சுவாரஸ்யமான இயற்கைச்சூழலில் இடம்பெற்றது. பெருமளவிலான பெற்றோர்களும் கலந்கொண்டனர். சிறுவர் விளையாட்டுக்கள் மற்றும் பட்டம் விடுதல் போன்றனவும் இடம்பெற்றன.

பிரதம அதிதிகளாக உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சமுகசேவையாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சமுகசேவையாளர் கி.ஜெயசிறில் உரையாற்றுகையில்:
ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் கல்வி செல்வம் வீரத்திற்கு அப்பால் இன்று எமது குழந்தைகளுக்கு தேவைப்படுவது அன்பாகும்.

அன்பு பாசம் போன்ற நல்ல உணர்வுகளை நுகரமுடியாதவர்களாக இன்றைய சிறுவர்கள் காணப்படுகின்றனர்.

பெற்றோர் முதியோரின் அன்பை குழந்தைகள் எதிர்பார்க்கின்றனர். அதன் தாக்கமே இவ்வருட சிறுவர்தின தொனிப்பொருள். என்றார்.

சிறுவர்விளையாட்டில் பங்கேற்கும் சிறுவர்சிறுமியர்களுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டன..அன்று பிறந்த நாள் கொண்டாடிய சிறுதியொருவரின் கொண்டாட்டமும் இடம்பெற்றது.கடற்கரையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -