தலவாக்கலை பி.கேதீஸ்-
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பூண்டுலோயா நகரில் 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 200 ற்கு மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொண்டமானின் பெயரை நீக்கி நீக்கி பூல்பேங்க் தொழில் பயிற்சி நிலையம் என மாற்றப்பட்டுள்ளதுடன், சௌமியமூர்த்தித் தொண்டாமனின் உருவப்படமும் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மலையகத்தின் தந்தையென போற்றப்படும் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் உருவப்படத்தை நீக்கியமையை கண்டிப்பதாகவும் மீண்டும் அவரின் பெயரை சூட்டவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டோர் கோஷம் எழுப்பினர். பூண்டுலோயா நகரில் 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பாடசாலைக்கு அண்மித்த பகுதியிலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் பிரதான வீதி வழியாக பூண்டுலோயா பஸ் தரிப்பிடம் வரை சென்று பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் அமர்ந்த பிரதேச மக்கள் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் பூண்டுலோயா நகரில் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.