நேற்று சில பௌத்த அமைப்புக்கள் கொழும்பில் நடாத்திய ஊடக மாநாட்டின் போது மாடுஅறுப்பதை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்திருந்தன.இன்றுஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன மாடுகளை ஏற்றிச் செல்வதை தடைசெய்துள்ளார்.இவற்றை தொடர்புபடுத்தி பார்க்கின்ற போது இனவாதிகளின் கோரிக்கைக்குஅமைவாகவே இவ்விடயம் நடந்தேறியுள்ளமை தெளிவாகிறது.ஜனாதிபதி மைத்திரிப்பாலசிறிசேன இனவாத சிந்தனை கொண்டவர் என்பது பல விடயங்களில் புலனாகியுள்ளபோதிலும் இப்படி விரைவாக இனவாதிகளின் சிந்தனைகளை செவிமடுப்பவராககருதியிருக்கவில்லை.
மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லுவதை உடனடியாக தடை செய்யுமளவுஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவுக்கு எது உடனடிக் காரணியாக அமைந்தது.அண்மைக்காலத்தில் சொல்லுமளவு இப்படியான ஒரு தேவை எழுந்திருக்கவில்லை.மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை தடை செய்கின்ற போது அவற்றை கால்நடையாக நடாத்தி உரிய இடங்களுக்கு கொண்டு செல்வர். மிக நீண்ட தூரங்களுக்கு இப்படிகொண்டு செல்கின்ற போது மாடுகள் மிகவும் சிரமத்தை எதிர்கொள்ளும். ஜனாதிபதிமைத்திரிப்பால சிறிசேனவின் இத் தடை தான் மிருக வதைக்கு வழி கோலப் போகிறது.
மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை தடை செய்தால், அவற்றை உரியஇடங்களுக்கு கொண்டு செல்ல இவ்வரசு எவ்வாறான மாற்று வழியை செய்யப்போகிறது.சில வேலை மாடுகளுக்கு இறக்கை பூட்டி தரப்போகிறார்களோ தெரியவில்லை.அது என்னமாடுகளுக்கு மாத்திரம் இப்படியான விசேட தடைகள் என சிந்தித்தாலே இதிலுள்ளஇனவாத நோக்கை புரிந்துகொள்ளலாம்.