மாணவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் வீழ்த்திய ஓட்டமாவடி ஹிஜ்றாவின் சிறுவர் தின நிகழ்வு…







ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

சிறுவர்களை வீதிக்கிறக்கி அமைதியான நடை பவணி ஆர்ப்பாட்டத்தின் மூலம் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் துஸ் பிரயோகங்களுக்கும் வன் முறைகளுக்கும் எதிராக சென்ற வருடம் (2016) சர்வதேச சிறுவர் தின நிகழ்வினை தேசியத்திற்கும் ஏனைய பாடசாலைகளுக்கும் எடுத்துக்காட்டாகவும், படிப்பினையாகவும் ஓட்டமாவடி மூன்றம் வட்டார ஆரம்ப பாடசாலையான ஹிஜ்றா வித்தியாலயம் நடாத்திக்காட்டியது.

அதே போன்று இவ்வருடம் சர்வதேச சிறுவர் தின நிகழ்வினை இன்று (02.10.) திங்கட் கிழமை பாடசாலை முற்றத்தில் சகல விதமான விளையட்டு மற்றும் கலை நிகழ்சிகளை ஏற்பாடு செய்து பெறுமதியான பரிசில்களையும் வழங்கி சிறுவர்களான மாணவ செல்வங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் வீழ்த்தியமையானது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயமாகவும் ஏனைய படசாலைகளுக்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

மேலும் பாடசாலையின் அதிபரான திருமதி-எஸ்.எஸ்.ஹமீட் தலைமையில் இடம் பெற்ற குறித்தி சிறுவர் தின நிகழ்விற்கு பிரதான உரையினை ஓட்டமாவடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் பேஸ் இமாம் அல்-ஹாஜ் ஏ.எல்.முஸ்தபா மெளலவி நடாத்தினார். அத்தோடு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆரம்ப கல்விக்கு பொறுப்பான ஆசிரியர் ஆலோசகர் ஜனாப்.ஏ.எம்.ஜாபி கரீம் மற்றும் குறித்த வலயத்தில் KIDS SPORTSக்கு பொறுப்பாக உள்ள எம்.எச். முபாறக் மெளலவி ஆகியோர் விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த தேசியத்திற்கும் ஏனைய பாடசாலைகளுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்த 2017ம் வருட ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வின் வீடியோ காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -