ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்களுக்கிடையிலான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு (28) சனிக்கிழமை கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டுப்போட்டி நிகழ்வில் அரபுக் கலாபீடத்தின் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மத் காஸிமி, ஜம்யியாவின் நிருவாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட அதிபருமான ஏ.கபீப் காஸிமி, காவத்தமுனை விசேட தேவையுடையோர் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நெய்னா முகம்மட், மற்றும் வாழைச்சேனை நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். றஹ்மதுல்லாஹ் பலாஹி ஆகியோர்களோடு அதிபர்கள் ஆசிரியர்கள் பள்ளிவாயல் தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.