
எச்.எம்.எம்.பர்ஸான்-
இலங்கையின் பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும் கலாசார உத்தியோகத்தரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி MA அவர்கள் கத்தார் நாட்டில் வசிக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மார்க்க உபதேசங்களை வழங்க பயணமாகவுள்ளார்.
கத்தாரிலுள்ள SLDC-QATAR ன் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இச் சிறப்பு நிகழ்வானது இம்மாதம் 19ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை ஆண்கள் பெண்கள் என இருபாலாருக்கும் நடைபெற ஏற்பாடுகள் செயப்பட்டிருக்கின்றது. குறித்த திகதியில் இடம்பெறவுள்ள நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு அலாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.