முன்னாள் ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவரும், கல்குடா அரசியலில் முக்கிய பங்காளியாக செயற்பட்டு வருபவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஓட்டமாவடி பிரதேச சபையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியினை வகித்தவரும், பிரதேசத்தில் பிரபல தொழில் அதிபருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.ஹனீபா ஹாஜியிடம் எதற்காக புதிதாக 28.10.2017 திகதி தெரிவு செய்யப்பட இருக்கின்ற நம்பிக்கையாளர் சபையின் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தினை தற்பொழுது செயலாளாக உள்ள அதிபர் எம்.யூ.எம்.இஸ்மாயில் தெளிவுபடுத்தும் காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரதேசத்தில் அதிகரித்து காணப்படுகின்ற போதை பொருள் பாவனையினை இல்லாதொழிப்பதற்கு புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற நிருவாகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றது.? தேர்வு நடை பெறும் அன்று அசம்பாவிதங்களை தடுக்கும் முகமாக எவ்வாறான முன் ஏற்பாடுகளை தற்போதைய பள்ளிவாசல் நிருவாகம் எடுத்துள்ளது.? மூன்று குழுக்களாக போட்டியிடுகின்ற பொழுதும் எதற்காக தனி நபர்கள் தங்களுடைய இலக்கங்களுக்கு மட்டும் ஆதரவு தேடுகின்றனர் போன்ற கேளிவிகளுக்கும் குறித்த காணொளியில் விரிவான பதில்களை தந்துள்ளார் அதிபர். எம்.யூ.இஸ்மாயில்,