இன்று முற்பகல் சுமார் இரண்டரை மணி நேரம் வரை நீடித்த இந்த உரையாடலின் போது கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா சுட்டிக்காட்டினார்,
அத்துடன் அண்மையில் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு தமது மாகாணத்திலேயே நியமனம் வழங்க வேண்டும் என தாம் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணணிடம் கோரிக்கை விடுத்ததையும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
ஆகவே இன்னும் இரண்டு நாட்களில் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அவ்வாறு ஆசிரியர்களுக்கு தீர்வு வழங்கப்படாத பட்சத்தில் தாம் பாராளுமன்ற கோப் குழுவில் இந்தப் பிரச்சினையை பிரதான பிரச்சினையாக முன்வைத்து உரிய நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கூறினார்.