பாடசாலைக்கு வளங்களைப் பெற்றுக்கொடுப்பதில் அரசியல் நோக்கம் இருக்கக்கூடாது

நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-

​மலையகப் பாடசாலைகள் என்பது வளங்களால் நிறைந்தது அல்ல. நகர்புறத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு அப்பால் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியூள்ளது. அத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைககளைப் பெற்றுக்கொடுக்க யார் முன்வந்தாலும் அதனை ஏற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

பாடசாலைகளுக்கு வளங்களைப் பெற்றுக்கொடுப்பதில் அரசியல்நோக்கம் இருக்கக் கூடாது என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

​வலப்பனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சிலவர்கண்டி தமிழ் வித்தியாலயத்துக்கு ஐந்துலட்சம் பெறுமதியான நடைபாதையை செப்பனிட்டு பாடசாலையின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வூ அண்மையில் (13-10) இடம்பெற்றது. 

வலப்பனை பிரதேச இணைப்பாளர் திருமதி சுஜிகலாவின் ஏற்பாட்டில் பாடசாலை உப அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாண உறுப்பினர் திருமதி. சரஸ்வதி சிவகுருஇ முன்னாள் மத்திய மாகாகண கல்வி அமைச்சரும் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான வீ.புத்திரசிகாமணி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடரந்து உரையாற்றுகையில்

​நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து மக்களுக்கு அவசியமான அபிவிருத்திப்பணிகளை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் மேற்கொண்டு வருகின்றௌம். அதேநேரம் பாடசாலை நிர்வாகத்தினரால் விடுக்கப்படும் வேண்டுகோள்களுக்கு அமைவாகவூம் இயலுமான அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டுவருகின்றௌம்.

 அந்த அடிப்படையிலேயே சிலவர்கண்டி பாடசாலைகயின் சிறு பாதை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. எனது மாதாந்த வேதனத்தில் மாணவர்களின் இணைபாடவிதான செயற்பாட்டு திறமைகளை ஊக்குவிக்க ஒரு பகுதியை செலவிட்டு வருகின்றேன். அதனை நான் மாதந்தோறும் விளம்பரம் செய்துகொண்டு இருப்பதில்லை. அது அரசியல் நோக்கத்துக்காக செய்யப்படுவதில்லை. 

கடந்த காலங்களில் பல பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கி வைத்தேன். பலர் அப்பியாசக் கொப்பிகளை எதிர்பார்க்கிறார்கள். அனைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு பெற்றௌருக்கு உரியது என்பதை பலமுறை வலியூறுத்தியூள்ளேன். நான் மாணவர்களின் தலைமைத்துவ பண்பினை வளர்க்கும் எண்ணத்துடனேயே பிரத்தியேகமாக உதவி வருகிறேன். மாணவர்களிடத்தில் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும். அதனை நாம் ஊக்குவிப்பவர்களாக இருக்க வேண்டும்.

​மலையகப் பாடசாலைகள் பல அபிவிருத்தி தேவைகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றைப்பெற்றுக்கொடுப்பதில் அரசியல் நோக்கமோ அல்லது தடைகளோ ஏற்படுத்துவது சமூகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல. நுவரெலியா மாவட்ட தமிழ்மொழி மூலமாதன பாடசாலைகள் அனைத்தும் மாகாண சபை நிர்வாகத்துக்கு கீழாகவே வருகின்றன. 

எனினும் மத்திய அரசாங்கத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றபோது அதனை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் நிலவூகின்றன. அண்மையில் அமைச்சர் திகாம்பரம் ஒதுக்கியிருந்த பல பாடசாலை கட்டட நிர்மாணத்துக்கான நிதி போதிய ஒத்தழைப்பு கிடைக்காமையால் வேறு தேவைகளுக்கு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமைகள் அபிவிருத்தியை வேண்டி நிற்கும் மலையகக் கல்வித்துறைக்கு ஆரோக்கியமானதல்ல எனவூம் தெரிவித்துள்ளார்.
















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -