அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்க முயல்வதற்கு எதிராக தலைநகரில் ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்படும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து அக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியவம்சாவளி மக்கள் நலன் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் அரும் பெரும் சேவையாற்றிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை குறிப்பாக பயிற்சி மையம் மற்றும் மண்டபங்கள் விளையாட்டுமைதானம் போன்றவற்றிலிருந்து நீக்க முயலும் வரலாற்று துரோகத்திற்கு எதிராக அதனை கண்டித்து தலைநகரில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு கிளையுடன் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் இணைந்து இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வரலாற்றை பரிணமிக்க செய்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை அமைச்சரவை அங்கீகாரத்தினூடாக அழிக்கமுயல்வதை எதிர்த்து மலையக மக்களுக்கு ஆதரவாக தலைநகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் தலைநகர் வாழ் தமிழ் மக் கள் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -