பாகிஸ்தான் பயணமாகும் மலையக இளைஞன்

மு.இராமச்சந்திரன்-

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றிணைந்து இளைஞர் கழகங்களினூடாக பல இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து இளைஞர் கழக செயற்பாடுகளில் முன்மாதிரியாக திகழும் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச நிகழ்வுகளில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுகின்றது..

அந்த வகையில் எதிர்வரும் 31ஆம் திகதி பாகிஸ்தான் பல்கலைகழகத்தில் ஆரம்பமாகவிருக்கும் சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்திற்க்கு இலங்கையில் இருந்து 15 பேர் அடங்கிய குழாமினர் பயணமகின்றனர்.
இக்குழுவில் மலையக இளைஞர்களை பிரதிநித்துவப்படுத்தி டிக்கோயா போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவரும் போடைஸ் இளைஞர் கழகத்தின் தலைவரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் இளைஞர் வலையமைப்பின் பிரதேச ஊடக ஒருங்கிணைப்பாளரும் பூபாலன் சாந்தி ஆகியோரின் மகனுமான #பூபாலன்_லஷந்தகுமார் என்பவர் பங்குப்பற்றுகின்றார்..

இவர் போடைஸ் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவனும் ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியின் உயர்தர மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -