கிழக்கு மாகாண கல்வியல்கல்லாரி ஆசிரியர்களை மீண்டும் பந்தாடியுள்ளது கல்வியமைச்சு!

காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாண கல்வியியல்கல்லூரி ஆசிரியர்களை மீண்டுமொருமுறை பந்தாடியுள்ளது கல்வியமைச்சு என இலங்கைத்தமிழர் ஆசிரியர்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்தவருடமும் இவ்வாறான நிலையொன்று தோன்றியபோது கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அகமட் கல்வியமைச்சிற்குச் சென்று அங்கு சத்தியாக்கிரகமிருந்து அதனை வெற்றி பெற்றிருந்தமையை குறிப்பிடவேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கல்வியியல்கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சியை பூர்த்திசெய்து வெளியேறும்போது இப்படியான முறையற்ற ரீதியில் நியமித்தல் நடைபெறுவது புதியவிடயமல்ல. இது விடயத்தில் பிரஸ்தாப ஆசிரியர்களும் பெற்றோhர்களும் பெரும் மனஉழைச்சலுக்கும் அசௌகரியத்திற்கும் உள்ளாகின்றார்கள். இவ்வாறான நியமனத்தின்போது தெரில்பெறும் சந்தோசத்திற்கு அப்பால் அவர்கள் மிகுந்த பயபீதியுடன் காணப்படுவதைக் குறிப்பிடமுடியும்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் இல்லையென்றால் அவர்களை வேறு மாகாணங்களுக்கு நியமிப்பதில் எவ்வித ஆட்சேபனையுமில்லை. ஏலவே கிழக்கு மாகாண கல்வித்தரம் நாட்டின் இறுதி அதாவது 9வது நிலையிலுள்ளதை நாமறிவோம். அதற்கு போதியளவு ஆசிரியர்களின்மையும் ஒரு காரணமாகக்கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிழக்கு ஆசிரியர்களை வேறுஇடங்களுக்கு நியமித்திருப்பதை நியாயமென்று கூறமுடியுமா?

கல்வியியற் கல்லுாரிகளுக்கான நியமனங்களின்போது கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல டிப்ளோமாதாரிகள் பலரை (ஆண்இ பெண் இரு பாலாரையும்) கிழக்கு மாகாணத்தில் வெற்றிடம் இருக்கத்தக்கதாக வெளி மாவட்டங்களுக்கு நியமித்தமை தொடர்பில் இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்களின் விருப்பு வெறுப்புக்களில் நியாயமானவற்றை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை வழங்குவது கல்வி அமைச்சின் தலையாய கடமைப் பொறுப்பாகும். அப்போதுதான் இலங்கையின் கல்வித்துறையானது தனது இலக்கை அடைய வழியேற்படும்.
ஆசிரியர் நியமனங்களின்போது வெற்றிடங்கள் உள்ள தனது மாகாணத்தில் அந்த நியமனங்கள் வழங்கப்படாது வெளி மாகாணங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவது பாரிய பிரச்சினையை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக பெண் ஆசிரியைகள் இதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக எமக்கு தெரிவிக்கின்றனர். பலர் நுவரேலியா கண்டி போன்ற பிரதேசஙங்களில் மிகவும் உள்பிரதேசங்களில் ஒற்றையடிப்பாதையால் செல்லவேண்டிய பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியரானதும் பெண்ஆசிரியைகள் பெரும்பாலும் மணவாழ்க்கைக்கு தயாராகுவார்கள். இக்கட்டத்தில் இவ்வாறு நூற்றுக்கணக்கான மைல் தூரமுள்ள இடங்களுக்கு நியமித்தல் தொழிலின்மீது வெறுப்பை ஏற்படுத்த ஏதுவாயாயிருக்கும்.
இதேவேளை அகிலஇலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற ஓர் ஆசிரியைக்கு மிகவும் தூரப்பிரதேச பாடசாலை வழங்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கு தமிழ் மொழி மூல கிழக்கு மாகாண ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை துரதிஸ்டவசமான விடயமாகும்.

இதேவேளை இவர்களைப்போல் சாதாரண சித்திபெற்ற சிலரை சொந்த மாவட்டத்தில் நியமிக்கப்பட்டிருப்தையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.. இது எந்த அடிப்படையில் சாத்தியமாகும் என்பதையும் அறிய விரும்புகிறது சங்கம்.

மெரிட் சித்திபெற்ற ஆசிரியர்களை சொந்த பிரதேசத்தில் தேசிய பாடசாலையில் நியமிப்பது ஆசிரியர் மத்தியில் ஏற்றத்தாழ்வை தோற்றுவிக்கும். எனினும் இதே மெரிட் சித்திபெற்ற இன்னும் சில ஆசிரியர்களை மிகவும் பின்தங்கிய மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இது நியமனத்தில் ஒரு சீரற்றதன்மையைத் தோற்றுவித்திருக்கின்றது.

இது விடயத்தில் நாம் ஒரு பொறுப்பான அமைப்பென்ற வகையில் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்களுடன் இது விடயமாக பேசி பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுப்போம்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -