எந்த சபையாக இருந்தாலும் கல்குடாவின் அரசியலை தீர்மானிக்கும் நம்பிக்கையாளர் சபையாக இருக்க வேண்டும்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ந்த சபையாக இருந்தாலும் கல்குடாவின் அரசியலை தீர்மானிக்கும் நம்பிக்கையாளர் சபையாக இருக்க வேண்டும்.. அத்தோடு ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு இடமில்லை என்கின்றார் - அதிபர் எம்.யூ.எம்.இஸ்மாயில்….

அரசியல் என்பது கல்குடா முஸ்லிம் பிரதேசம் 2000ம் ஆண்டு அடைந்த மிகப் பெரிய வெற்றியாகவே கருதப்படுகின்றது. அதற்கு முதல் கல்குடா முஸ்லிம் பிரதேசம் அரசியலிலே தலைமைத்துவத்தினை பெற்றுக்கொண்ட வரலாறு கிடையாது. அந்த வகையில் 2000ம் ஆண்டு கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிருவாகங்கள் ஒன்றிணைந்தே அரசியலினை மேற்கொண்டார்கள்.

வரலாற்றினை பார்க்கப்போனால் முன்னாள் மறைந்த அமைச்சர் தேவநாயகம், முகஹம்மது முத்து சேர்மன், காட்டு விதானையார், புஹாரி விதானையார் , மொகைதீன் அப்துர் காதர் போன்றவர்கள் எல்லாம் அரசியல் செய்த பொழுது கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து வக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாசலினை மையப்படுத்தினான் ஒற்றுமையினை கடைப்பிடித்தார்கள்.

அதே போலத்தான் நாங்கள் நேசிக்கின்ற பிரதி அமைச்சர் அமீர் அலி போன்றவர்களையும் நாங்களை முன்னெடுத்து சென்றோம். நான் கடந்த 13 ஆண்டுகளாக பிரதி அமைச்சர் அமீர் அலியுடன் அரசியல் செய்து வருக்கின்றவன் என்ற அடிப்படையில் காற்புணர்ச்சி கொண்டு சிலர் நோக்குகின்றார்கள். உண்மையில் நான் அப்படி பட்டவன் அல்ல. என்னை பொறுத்த மட்டில் நான் சொந்த ஊரை, கல்குடாவை, மட்டக்களப்பு மாவட்டத்தை நேசிக்கின்ற மிகப்பலம் வாய்ந்த ஆதரவாளனாக இருந்து வருகின்றேன்.

அதன் அடிப்படையில்தான் என்னையும் பிரதி அமைச்சர் அமீர் அலியையும் இணைத்து பேசுகின்றார்கள். எவராக இருந்தாலும் சரி அல்லது கல்குடாவிலே பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு பிற்பாடு ஒரு தலைமைத்துவம் வருவதாக இருந்தாலும் சரி அவருக்கு ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாசல் பூரண ஒத்துளைப்பினை கொடுத்து அவரை கல்குடாவின் அரசியல் தலைமையாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நான் இருக்கின்றேன்.

அதனுடைய அடிப்படை விளக்கம் என்னவென்றால்.? கல்குடாவிலே பள்ளிவாசல்கள் மூலமாகத்தான் மக்களை ஒன்று சேர்க்கலாம் என்ற கோட்பாடின் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினையோ அல்லது மாகாண சபை பிரதி நிதித்துவத்தினையோ தக்கவைத்து கொள்ள முடியும். அதே போன்று வரப்போகின்ற புதிய நம்பிக்கையாளர் சபையும் காலாகாலமாக கைப்பிடித்து வந்த வரலாற்றினை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதே எனது கண்டிப்பான வேண்டு கோளாகும்.

இவ்வாறு வருக்கின்ற 28ம் திகதி நடக்கவிருக்கின்ற ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபை தேர்தல் பேசும் பொருளாக சூடு பிடித்துள்ள நிலையில் அதன் செயலாளரும் அதிபருமான எம்.யூ.எம்.இஸ்மாயில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தோடு ஓட்டமாவடி பள்ளிவாசல் நிருவாகத்தில் ஏனைய இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஒரு பொழுதும் நான் இடமளிக்க போவதில்லை என்ற விளக்கங்களுடனான அதிபர் இஸ்மாயில் அவர்களின் விரிவான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -