மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்த மதங்களிற்கு இடையிலான மாநாட்டிற்கு யுஎஸ்எயிட் ஆதரவு

க்டோபர் 26, கொழும்பு: மனிதாபிமான தேவைகளிற்கு பதில் அளித்தலை உள்ளுர்
மயப்படுத்துதல் மதமற்றும் நம்பிக்கை அமைப்புகளின் மாநாட்டிற்காக இலங்கையில் நடத்தியதன்
மூலமும், 36 நாடுகளின் 140 பிரதிநிதிகளை மாநாட்டிற்காக அழைத்தி மூலமும் ஒக்டோபர்
16 ம் திகதி முதல் 19 ம் திகதி வரை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவர்
அமைப்பு (யு.எஸ்.எயிட்), அமைப்புகள் மற்றும் உள்ளுர் மனிதாபிமான பதிலளித்தலிற்கு
இடையிலான இணைப்பை பலப்படுத்தியது.

உள்ளுர் மற்றும் சர்வதேச நம்பிக்கை சார்ந்த
அமைப்புகளின் பிரதிநிதிகள், நம்பிக்கை சார்ந்த மற்றும் மத சார்பற்ற அமைப்புகள், நிவாரண
மற்றும் உதவி அமைப்புகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள்
கலந்துகொண்டு சமூக மற்றும் நம்பிக்கை சார்ந்த செயற்பாட்டாளர்கள் வலையமைப்புகள் மூலம்
உள்ளுர்மயப்படுத்துவது இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகளால் பேரழிவுகளை
எதிர்கொள்ளும் சமூகங்களிற்கான உதவியை எவ்வாறு சிறப்பானதாக்கும் என ஆராய்ந்தனர்.
குறிப்பிட்ட நிகழ்வில் உரையாற்றிய யுஎஸ்எயிட்டின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான
இயக்குநர் கலாநிதி அன்றூ சிசன், நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்ட மற்றும்
மதச்சார்பற்ற உள்ளுர் அமைப்புகளுடன் பணியாற்றுவதில் யுஎஸ்எயிட்டின இலங்கை பிரிவிற்கு
உள்ள நீண்ட கால அனுபவத்தை சுட்டிக்காட்டினார்.
'உள்ளுர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நாங்கள் மக்களின் எண்ணங்கள்
மற்றும் தேவைகள் அவர்களின் சூழமைவுகள் குறித்த சிறந்த புரிந்துணர்வை
பெற்றுக்கொள்கின்றோம் என தெரிவித்த அவர் 'இதன் காரணமாக பலனளிக்ககூடிய
நீண்டகாலம் நீடிக்க கூடிய தீர்வுகளை காண்பது அதிகளவிற்கு சாத்தியமாகின்றது' எனவும்
தெரிவித்தார். 'சில வருடங்களிற்கு முன்னர் உள்ளுர் மயப்படுத ;துதல் என்பது யுஎஸ்எயட்
அமைப்பின் முக்கிய நிகழ ;ச்சி நிரலாக மாறியது இதன் மூலம ; நாங்கள் உள்ளுர் தீர்வுகள்
மற்றும் இணைப்புகளை சாத்தியமான அளவிற்கு கண்டுபிடிப்பதன் மூலம் எங்கள் திட்டங்களை
வலுவானதாக்க முயன்றோம்' என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த மூன்று நாள் நிகழ்வு எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து ஆராய்ந்தது, சிறந்த
நடைமுறைகளை பகிர்ந்துகொண்டது, மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக
ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட பரிந்துரைகளை முன்வைத்தது. மோதல் மற்றும்
சமாதானத்தை ஏற்படுத்துதல், இடர்கால நடவடிக்கைகள், அகதிகள், மற்றும் பலவந்தமான
புலம்பெயர்வு பேரழிவு ஆபத்தை குறைத்தல், பாலின அடிப்படையிலான வன் முறைகள் சிறுவர்
மற்றும் உடல்நலம் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராய்ந்தது. மனிதாபிமான பணியின்
போது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட வலையமைப்புகளில் பெண்களின் பங்களிப்பின்
முக்கியத்துவத்தை வலியறுத்தியது.
மாநாட்டின் முடிவில் அதில் பங்கேற்றவர்கள் சர்வதேச தேசிய மற்றும் உள்ளுர் மட்டத்திலான
நடவடிக்கைகளிற்கான ஐக்கியப்பட்ட அழைப்பை விடுத்தனர். உள்ளுர் நம்பிக்கை சார்ந்த
செயற்பாட்டாளர்களின் பணிகளில் ஏனைய மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் சகாக்கள்
இணைந்து கொள்வதற்கான வழிமுறைகளை அவர்கள் அடையாளம் கண்டனர். மாதிரிகள்
மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதற்கும் தகுதியான அனுபவங்களை உள்வாங்கி
அவற்றை அரசாங்கத ;திடம் வாதாடுவதற ;குமான வாய்ப்புகளை மேலும் உருவாக்கிகொள்வது
குறித்த பரிந்துரையொன்று முன்வைக்கப்பட்டது. நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்ட
அமைப்புகள் உட்பட உள்ளுர் அமைப்புகளை நிதிசார்ந்த அடிப்படையில் பலப்படுத்துவது
குறித்த யோசனையும் முன்வைக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் மனிதாபிமான
நடவடிக்கைகளின் போது முன்னணியில் நிற்கலாம் மேலும் இதன் மூலம் பேரழிவுகளை
எதிர்கொள்வதற்கான தயார்படுத ;தலில் பல்வேறு பட்ட சமூகத்தினரை உள்வாங்கலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டது.

யுஎஸ்எயிட்டினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு மகாபோதி சமூகத்தை
சேர்ந்த பானகல உபதிஸ்ஸ தேரர், தேசிய கிறிஸ்தவ பேரவையின் எபனேசர் ஜோசப் ஆகியோர்
அடங்கிய உள்ளுர் குழு தலைமை தாங்கியது. இலங்கையின் அனைத்து மதத்தின்
பிரதிநிதிகளும் மற்றும் நம்பிக்கை மற்றும் அபிவிருத ;திக்கான திட்டமிடல் குழுவின் சர்வதேச
அமைப்பினரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -