முகம்மட் ஸாஜித்-
தனியார் மற்றும் அரச திணைக்களங்களுக்கிடையிலான மரதன்(5000M,3000M ) ஓட்டப் போட்டியில் பங்குகொள்வதற்காக
மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக சிறீ லங்கா ரெலிகொமை பிரதிநிதித்துவப்படுத்தி ஏறாவூரைச் சேர்ந்த அலியார் குத்தூஸ் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பெற்று மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த போட்டியானது கொழும்பு ஹோமாகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் மாவட்டம் மாகாணம் மற்றும் தேசியம் கடந்து சாதனை படைத்தவீரர்.
கடந்த வருடம் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற நடைப் போட்டியில் முதலாம் இடம் பெற்று சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.