நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்படுவதற்கு வித்திட்டது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்




க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்படுவதற்கு வித்திட்டது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இதனை ஆதரபூர்வமாக ஊடகங்களுக்கு தெரிவிக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் உறுதியாக தெரிவித்தார்.

டயகம கிழக்கு 3ம் பிரிவு தோட்டத்தில் அமைக்கப்பட்ட கரபந்தாட்ட மைதானத்தை 22.10.2017 அன்று பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியா கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, பிரதி தலைவர் ராமையா என கட்சியின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

1998ம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை விரிவாக்க வேண்டும் என அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் சீ.பீ.ரத்நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சியின் மறைந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். ரேணுகா ஹேரத் எதிர்ப்பினை தெரிவித்தார்.

அன்றைய நாள் முதல் தொடர்ந்தும் இழுபறி நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த பிரதேச சபை விரிவாக்கல் திட்டம் இந்த அரசாங்கத்தில் இ.தொ.காங்கிரஸின் கருத்துகளையும் ஏற்று நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வரைபடம் கூட இ.தொ.காவால் உருவாக்கப்பட்டது தான். இத்திட்டத்திற்காக சீ.பீ.ரத்நாயக்கவிடம் ஊடாக முன்வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பிலான தகவல்கள் அனைத்தையும் திரட்டி தரும்படி நான் தற்பொழுது கோரியுள்ளேன். சிறு கால அவகாசத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த திட்டம் யாரால் உருவாக்கப்பட்டது. இதற்கு வித்திட்டவர்கள் யார் என்பதை அறியப்படுத்துவேன்.

இன்று நுவரெலியா மாவட்டத்தை ஏழாக்கி விட்டும், பனிரென்டாக்கி விட்டும் என்று சிலர் சொல்லி வருகின்றனர். ஆனால் இதன் ஆரம்பம் யாரால் உருவாக்கப்பட்டது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. இதனை வெகுவிரைவில் அம்பலப்படுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -