ஆற்றலுக்கும் ஆளுமைக்குமான களம்

லை இலக்கிய துறையில் காத்திரமான பங்களிப்பை ஆற்றி வருகின்ற தமிழ் மாமன்றம் ''ஆற்றலுக்கும் ஆளுமைக்குமான களம்'' என்ற தொனிப்பொருளில் ஆரம்பித்த “விளை நிலம்” என்ற தொடர் நிகழ்வின் மூன்றாவது களம் எதிர்வரும் 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு, வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஆற்றலுக்கும் ஆளுமைக்குமான களமாக மட்டும் இந் நிகழ்வு அமையாமல் சமூக அக்கறையுடன் எமது பிரச்சினைகளை விவாதத்திற்கு உட்படுத்தும் நோக்குடன் இந் நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விளை நிலம் களம் - 03 இல் ''மரபுசார்- கிராமிய வழிபாட்டுமுறைகளின் தொடர்ச்சியும் சமகாலத்திய பொருத்தப்பாடும் -பொது வெளி உரையாடல்- ''எனும் தெனிப் பொருளில் அண்மைய அவசியமான தேவையின் பொருட்டு இந்த உரையாடல் அமையவிருக்கிறது.

எமது பிரச்சினைகளை விவாதத்திற்குட்படுத்துவதன் மூலம் அவற்றை சம்பந்தப்பட்டவர்களி;ன் பார்வைக்கு கொண்டு செல்ல முடியம் என்ற நோக்கத்துடன் சமூக அக்கறையுடன் எமது பிரச்சினைகளை விவாதிப்பதற்கு தமிழ் மாமன்றம் தயாராகவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கின்ற ‘விளை நிலம்’ நிகழ்வில் கலை இலக்கிய துறைசார் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழ் மாமன்றம் அழைக்கின்றது.
‘தமிழால் வையகத்தலைமை கொள்வோம்’
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -