எஸ்.அஷ்ரப்கான்-
பாலமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான எம்.கே. இப்னு அஸார் (Chief Inspector of Police- பிரதம பொலிஸ் பரிசோதகர்) சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாளை திங்கட்கிழமை (2017.10.30) இவர் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.
பொலிஸ் துறையில் இணைந்து பல்வேறு பதவிகளில் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இவர் சேவையாற்றியிருந்தார். தனது பதவிக்காலத்தில் பிரதேசத்தின் தமிழ் முஸ்லிம் உறவுக்கான பாலமாகத் திகழ்ந்த இவர், பொலிஸ் மற்றும் மக்கள் தொடர்பாடலில் சிறந்த ஒரு அதிகாரியாக சேவைற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு பதவி உயர்வு பெற்று சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.