பொத்துவில் கல்வி விடயம் தொடர்பில் போலிப்பிரச்சாரம் – முன்னாள் அமைச்சர் நஸீர் ஆவேஷம்

சப்னி அஹமட்- 

பொத்துவில் பிரதேச பாடாசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை விவகாரத்தில் என் மீது போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளாமலும் மக்களை குழம்பும் விடங்களில் ஈடுபடவேண்டாம் எனவும் மாற்றுக்கட்சியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த சில நாட்களாக பொத்துவிலில் ஆசிரியர் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிராக மேற்கொண்டுள்ள பிரச்சாரங்களில் கிழக்கு மாகான முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் மீது சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டுள்ள பிரச்சாரங்களுக்கு பதில் வழங்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

பொத்துவில் கல்வி விடயம் தொடர்பாக கடந்த 26ஆம் திகதி இரவு அம்பாறை பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமகே அவர்களின் விடுதியில் இது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினோம். அதன் போது பொத்துவில் உப கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர், பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் ஏனைய அதிபர்கள் முன்னிலையில் 05 வருடங்களாக கடமையாற்றிய 37 ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை ரத்து செய்யுமாறு ஆளுநர் அவர்கள் பணிப்புரை விடுத்தார். ஆனால் இதன் நான் பின்புலத்தில் நின்றுதான் இவ்வாறான பொத்துவில் மக்களுக்கு அநீதி இழைவிப்பதாக எங்கள் கட்சியின் மீதும் என் மீதும் உள்ள கோபத்தில் மாற்றுக்கட்சிக்காரர்கள் போலிப் பிரச்சாரங்களை முன்வைத்து செயற்படுகின்றதை வண்மையாக கண்டிப்பதுடன் ஆளுநருடன் நடைபெற்ற முக்கிய அதிகாரிகளின் கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பில் அறியாமல் முகநூல்களில் எழுதித்திரிவதை நிறுத்தி உண்மையை ஆராய்ந்து செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்..

05 வருடங்களை நிறைவு செய்தோருக்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாணப் கல்விப் பணிப்பாளர், முன்னைய அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஆகியோரினால் இவ் இடமாற்றங்கள் வழங்கி வைக்கப்பட்டது தவிர வேறு யாராலும் இவ் இடமாற்றங்கள் வழங்கி வைக்கப்படவில்லை.

குறித்த பொத்துவில் உபவலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் நான் பலமுறை பல் வேறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு குறித்த பிரதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தேன் அவ்வாறு இருக்கு இப்படியான ஓர் போலிப்பிரச்சாரம் மேற்கொள்வதை என்னால் ஏற்க முடியாது. குறித்த தீர்மானம் ஆளுநர் அவர்களினால் அங்கிருந்த பல அதிகாரிகளின் முன்னிலையில் அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. குறித்த ஆசிரியர்களின் வெற்றிடங்களை இவ்வருடத்திற்குள் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பாக இங்குள்ள ஆசிரியர் வெற்றிடங்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் புதிய கல்வியற் கல்லூரி ஆசிரியர்களையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பொத்துவில் பிரதேசத்தின் இவ்வாறன கல்வி, சமூக சார் விடயங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எனும் பேரியக்கத்தின் அரசியல்வாதிகள் எங்களைப்போன்று பலர் முன்னின்று செயற்பட்டதனாலே பல்வேறு வேலைத்திட்டங்களையும் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்துள்ளோம், இவ்விவகாரத்தை வைத்து ஒரு சிலர் அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டு பொத்துவில் கல்வியில் மாற்றத்தை கொண்டுவருகின்றோம் என கூறி அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்ள பலர் முயற்சிப்பதையும் எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது.

பொத்துவில் பிரதேசத்தின் கல்வி விடயத்தில் ஒரு போதும் அநீதி இழைக்க நாம் தயாரல்ல. பொத்துவில் கல்வி விடயத்தில் முன்னின்று செயற்படுவோம். அது போல் இங்குள்ள ஆசிரியர் பிரச்சினைகளைகளை தீர்ப்பதற்கு முன்னாள் அமைச்சர் என்ற ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை நான் மேற்கொண்டுள்ளேன். அதுபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினாலும் பல்வேறான திட்டங்கள் வகுக்கப்பட்டு பொத்துவில் கல்வியின் முன்னேற்றத்திற்கு உருதுணையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்படும். எனவும் அட்டாளைச்சேனை கோட்டத்திற்குள் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும் பல முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதற்காக சில ஆசிரியர்களை இங்கு நியமிகப்பதற்கு ஆளுநர் அவர்கள் உறுதியளித்துள்ளார்.– என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -