அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 26.10.2017 அட்டனில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது அரச மரத்தில் ஏறி ஆர்பாட்டம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய உறுப்பினரினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
அட்டன் மணிக்கூண்டு சந்தியிலுள்ள அரச மரத்தின் மேல் ஏறி குறித்த நபர் தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தற்போது காட்சிபடுத்தப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றகோரியும் அவ்வாறு அகற்றாதட்டசத்தில் மரத்திலிருந்து குதிக்கபோவதாக அறிவித்ததையடுத்தே பரபரப்பு ஏற்பட்டது
பின்னர் அங்கிருந்த ஆர்பாட்டகாரர்களினால் சாமதானம் கூறிய நிலையில் மரத்திலிருந்து இறங்கியமை குறித்த நபர் இறங்கினார்
மேலும் புனிதத்தன்மையை காக்கும் வகையில் போதி மரத்தில் ஏறும் போது தமது பாதனிகளை கழற்றியபின்னரே மரத்தில் ஏறியமை குறிப்பிடத்தக்கது