எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது வேலிவோரியன் கிராமத்தில் இயங்கி வரும் எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயத்துக்கு அத்தீப் பவுண்டேசன் அமைப்பினால் 25/10/2017 ஆம் திகதி அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேசத்தில் தேவையுடைய பல்வேறு தரப்பினருக்கும் உதவிகளை வழங்கி வரும் அத்தீப் பவுண்டேசன் அமைப்பிப்பு, பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கினங்க அமைப்பின் ஸ்தாபக தலைவர் தொழில் அதிபர் சமூக சேவையாளர் முஹர்ரம் பஸ்மீர் மற்றும் அத்தீப் பவுண்டேசன் அமைப்பின் செயலாளர் கல்முனைத்தொகுதி இளைஞர் பாராளமன்ற உறுப்பினரும் எதிர் கட்சி பிரதி அமைப்பாளருமான பைசர் தில்சாத் ஆகியோரினால் இந்த பாடசாலைக்கு தேவையான காகிதம் முதலிய எழுது பொருட்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஏ.எல். நாபித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட சமூக சேவையாளர் கிராமசேவகர் நாசர் அவர்களும் கலந்துகொண்டார்கள் .