தமிழ்த் தேசியத்தின் மற்றுமொரு துரோகியாக வடக்கு முதலமைச்சர் ?

ச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், முன்னணி தமிழ் வழக்கறிஞரும் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும்பணியாற்றியவர்.

2011 செப்டம்பரில் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதலாவது வட மாகாண சபையின் முதலமைச்சரும் ஆவார்.

வடக்கு- கிழக்கில் உக்கிரமான போர் இடம்பெற்ற காலங்களில் அவைகளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் கொழும்பில் பாதுகாப்பாக வாழ்த்து கொண்டிருந்தவர்தான் தமிழர்களின் துயரங்களில் சொல்லுமலவுக்கு பெரிய அக்கறை காட்டியதாக தெரியவில்லை

அப்படி வாழ்ந்து கொண்டிருந்த மனிதருக்கு மரத்தில் கனிந்த பழம் மடியில் விழுவது போல் தான் அவருக்கு முதலமைச்சர் பதவிக்கான சந்தர்ப்பம் கிடைத்தது அதற்கு முக்கிய காரணியாக அமைந்த விடயமாக அன்றைய மகிந்தவின் ஆட்சியில் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இருந்ததாலும் வடக்கின் ஆட்சியை ஆளும் தரப்பினரிடம் அதிகாரம் சென்று விடக்கூடாது என்பதாலும். சர்வதேசத்தின் அழுத்தங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கொடுக்கப்படமையாலும் அந்த தேர்தல் தமிழ் தரப்புக்கு முக்கியமானதாக இருந்தமையால் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்படவர்தான் இந்த நீதியரசர் விக்னேஸ்வரன் ஆவார்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்களின் அரசியல் போராட்டம் பாரிய மாற்றுத்திட்டம் ஏற்படதொடங்கப்பட்டது என்பதை நாம் உண்ணிப்பாக அவதானித்தால் கடந்த 2009களின் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர் அரசியலில் தீர்க்கதரிசனம் மிக்க தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களையும் அக் கூட்டமைப்பையும் காணக்கூடியதாக இருந்தது.

அதிலும் சம்பந்தன் அவர் ஒரு ஜனநாயகாவாதி; தந்தை செல்வாவை தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டவர்; இடைக்காலங்களில் வேறு எவரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளாதாவர்; வன்முறை சார்ந்த எந்த முயற்சிகளுக்கும் துணை நிற்காதவர்; தனது இனத்தையே காட்டிக்கொடுக்காதவர்; எந்தவொரு மனித உயிரையும் கொலை செய்யாதவர்; சிங்களவர்களாலும், முஸ்லிம் மக்களாலும் மதிக்கப்படுகின்றவர்; சர்வதேச சமூகத்தவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்; இலங்கை நாட்டில் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை வேண்டி நிற்கின்றவர்.

இத்தகைய தலைமையின் பின்னால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஜனநாயக வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

இந்த பின்னனியையும் வடக்கு மாகணத்தின் எதிர்கால நலனையும் முன்கொண்டு சொல்வதற்காகவே கூட்டமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் விக்னேஸ்வரன் ஐயா

அவரின் வருகையால் தமிழ் மக்களுக்கான தீர்வு நோக்கிய பயணத்தில் வடக்கு மக்களை ஒழுங்கமைக்கின்ற ஒரு அதிகாரபூர்வ நிறுவனமாக; உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகங்கள் எம்மைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தளமாக; செயற்படும் என்ற நம்பிக்கையே பலரிடத்தில் காணப்பட்டது.

ஆனால் தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புக்கும் அப்பாலும் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் மீறி தன்னுடைய கடும் போக்குத்தனத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதை தெடர்ந்தும் காணலாம்..அவரின் பதவிக்கான சத்தியப் பிரமான விடயத்தில் ஒரு நல்லிணக்கத்தை வெளிக்காட்டடும் சமிக்ஞையாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது

ஆனால் விக்னேஸ்வரன் முதலமைச்சருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநரிடம் பெறச் சென்ற போது தன்னிடமோ அல்லது ஜனாதிபதியிடமோ பதவிப் பிரமாணம் பெறாமல் நியமனக் கடிதத்தை வழங்க முடியாது என ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மறுத்ததாகவும் சத்தியப்பிரமாணம் செய்யாமலே முதலமைச்சருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது

அதற்கு அவரால் கூறப்பட்ட காரணம் பெரும் இனப்படுகொலையை நடத்தி எமது ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடித்தது மட்டுமன்றி தொடர்ந்து இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன் வடக்கின் முதலமைச்சராக ஒரு இலட்சத்துக்கு அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று மக்களின் பேராதரவைப் பெற்ற நான் பதவிப் பிரமாணம் செய்வதை எமது மக்கள் விரும்பவில்லை.என்ற காரணத்தை கூறியதன் மூலம் அவரின் கடும் போக்குசிந்தனை எப்படி என்பதை நாம் அவதானிக்கலாம்.( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் மஹிந்த ராஜபக்ச – சம்பந்தன் ஆகியேருக்கு இடையில் நடந்த பல சமரசங்கள் அடிப்படியில் கூட்டமைப்பின் வற்புறுத்தலுக்கு மத்தியில் மகிந்தவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் )

20l5 ஆரம்ப காலப்பகுதியில் புலம்பெயர் தமில் அமைப்புகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று சந்திப்புகளை நடத்தி த.தே கூட்டமைக்கும் அரசுக்கும் எதிரான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னிலைப்படுத்தினார். மாகாண சபையில் தலைமைக்கு அறிவிக்காமல் தனது விருப்பத்தின் படி அரசுக்கு எதிரான பல சட்டங்களையும் தீர்மானங்களையும் நிறைவேற்றுவதில் கூடிய கவனம் எடுத்தார்

அதில் ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு குறித்து அனைத்துலக விசாரணைகள் தேவை என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விடயத்தை அவர் பயணித்த சர்வதேச நாடுகள் எல்லாம் நியாயப்படுத்தினார்..அது மட்டும் அல்லது நீதித்துறையில் முக்கிய பதவியில் இருந்தவர் நீதித்துறையை பற்றி இலங்கையின் நீதித்துறை இனாவாதத்தல் கறைபடிந்து இருப்பதால் தமிழ் மக்களுக்கான நீதியை பொறுத்தர அனைத்து உலக சர்வதேச சமுகத்தின் உதவிதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதுவே அவரின் நம்பிக்கையாக உள்ளது.

அதை பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கின்றார். இவ்வாறன செயற்பாடு ஊடாக நான்தான் தமிழர்களின் அடுத்த தலைவர் என்கின்ற நற்பாசையை வளர்த்துக் கொண்டார்.

அதாவது கடந்த 2014இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெற்றது. அம்மாநாட்டிலே விக்னேஸ்வரன் முக்கியமான நபராக இருக்கவில்லை; அம்மாநாட்டிலே.சம்பந்தன் அவர்களும்,.மாவை சேனாதிராஜா அவர்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு தான் முன்மொழியப்படுவேன் என்ற எதிர்பார்ப்பு விக்னேஸ்வரனிடம் காணப்பட்டதாக அவருக்கு நெருக்கமான ஒரு சிலரிடமிருந்து தகவல் தெரிவித்து நின்றன. ஆனால் குறித்த மாகாநாட்டிலே முதலமைச்சர் .விக்னேஸ்வரன் அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. என்ற அச்சந்தர்ப்பத்த்தைதான் அவர் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அவருக்கும் இடையிலான விரிசலை ஆரம்பிக்க தொடங்கினார்.

தமிழ் தேசியக் கூட்டமைக்கு எதிரான சக்திகளும் தேர்தல்களில் தேல்வியுற்ற முற்போக்கு தமிழ் சிந்தனையாளர்களும் விக்னேஸ்வரனிடம் காணப்பட்டசில சுய நல விடயங்களான புகழ்விரும்புதல்,பிடிவாத குணம், தலைமைத்துவ அவா, போன்ற தனிப்பட்ட பலவீனங்கள் குறித்தும், நன்கு அறிந்து வைத்திருந்தனர்; அது மாத்திரமன்றி விக்னேஸ்வரனிடம் காணப்பட்ட அரசியல் அறியாமை, தமிழ்த் தேசியப் போராட்டம் குறித்த அறிவும் புலமையும் அனுபவமும் இன்மை போன்ற விடயங்களையும் அறிந்தே வைத்திருந்தனர்.

எனவே அவரை கையாளக்கூடிய பொறுத்தமான சந்தர்ப்பமொன்றினையும் அவர்கள் எதிர்பாத்திருந்தனர். அதுதான் தமிழ் மக்கள் பேரவை என்ற தமிழ் தேசியக் கூட்டமைக்கான மாற்று அரசியல் சக்தியாகவும் தமிழ் முற்போக்காளர்களுக்கான அரசியல் தலைமையாகவும் 20l5 டிசம்பர் l9 இல் விக்னேஸ்வரன் அவர்கள் இணைத்தலைவராக ஏற்றுக் கொண்டு

கூட்டமைபில் இருந்து பிரிந்து சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கிய கஜேந்திர குமார் ,பொதுத்தேர்தலில் தேல்வியை தழுவிய EPRLF கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ,PLOT அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் மற்றும் பல புத்திஜீவிகள் பல்கலைகழக மாணவர்கள் என்ற பல மட்டத்தினரால் ஆரம்பிக்கபட்ட ஒரு அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஆரம்ப நிகழ்வில் விக்னேஸ்வரன் ஐயாவள் நிகழ்த்தப்பட்ட உரையும் அவரின் கடும்போக்கும் அதன்னுடன் தெரர்புடைய விடயங்களையும் அவதானிக்கப்பட வேண்டியவை தற்போதைய அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை கடைப்பிடிக்கின்ற சம்பந்தன், அரசியல் தீர்வு விடயத்தில் கொழும்பு அரசாங்கத்தினால் தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுவிடக்கூடும் என்ற அச்சத்தை உணர்வதாளும் மக்களை வீதிப் போராட்டங்களுக்குத் தயார் செய்ய வேண்டி இருக்கிறது.

போரின் முடிவுக்குப் பின்னரும் கூட தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் கிஞ்சித்தேனும் அக்கறை காட்டாத நல்லாட்சி அரசும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வேண்டி உறுதியான முறையில் குரல் கொடுப்பதற்கும் ஆட்சியாளர்கள் மீது நெருக்குதல்களைப் பிரயோகிப்பதற்கும் தலைவர்கள் ஜனநாயக ரீதியான வெகுஜன போராட்டங்களுக்கு தமிழ் மக்களைத் தயார்படுத்த வேண்டுமென்பதில் அக்கறை காண்பிக்காத இடைவெளியை தமிழ் மக்கள் பேரவை நிரப்புவதற்கு முயற்சிக்கிறது. என்ற தனது தரப்பு வாதங்களை நியாயப்படுத்தினார்.

அதன் முதற்கட்ட செயற்பாடாக “எழுக தமிழ்” பேரணியில் தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரைகளும் அங்கு வெளியிடப்பட்ட பிரகடனமும் விக்னேஸ்வரன் முன்வைத்து கோரிக்கைகளும் அவரது அரசியல் பேச்சுக்களும் தமிழர் அரசியலை மீண்டும் தீவிரவாத மயப்படுத்தும் செயற்திட்டமொன்றின் அங்கம் என்று ஒரு கருத்தையும் நாட்டுப் பிரிவினையை மீண்டும் தூண்டுபவை என்று சிங்கள மக்களும் அரசும் அச்சப்படும் அளவுக்கு இருந்தது.

இதனை அவதானித்த கூட்டமைப்பின் தலைமைத்துவம் விக்னேஸ்வரன் பேசிய போது அவரால் வழங்கப்பட உறுதியானது. தமிழ் மக்கள் பேரவை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என உறுதியளித்து, அதன் உறுப்பினர்கள் விசேட ஆவணம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக விக்னேஸ்வரனால் தெரிவிக்கப்பட்டது அதன் பின் விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் நோக்கில்தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

என்றும் அதற்கான தீவுத்திட்டத்தை வரைந்து அதனை கடந்த 20l6 ஜனவரில் 3lல் பிரதம அதிதியாக விக்னேஸ்வரன் அவர்களால் வெளியிடப்பட்டது தமிழர்களுக்கு முழுக்க சார்பான விடயங்களை உள்ளடக்கிய அரசியல் தீர்வு விடயமாக இருந்தது. அந்த வரைபில் முஸ்லிம்கள் விடயாமாக ஒரு இடத்தில் - குறிப்பு என்ற பந்தியில் (அ) பிரிவில் சொல்லப்படுகிறது..

வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம் முஸ்லிம் சமூகத்தால் இணைந்த வட கிழக்கில் தமது குழு சார் உரிமைகளை நிறுவன ரீதயாக பாதுகாப்புக்கு எடுக்கும் முன்வைப்பு எதுவாயினும் அது தொடர்பில் அவர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாராக இருக்கிறோம் என பற்றுதியுடன் கூறிக் கொள்கிறோம்.

என அவாரல் வெளியிடப்பட அரசியல் தீர்வு வரைபில் அடுத்த சிறுபான்மை சமூகத்தின் அரசியல் உரிமையை இந்த முற்போக்கு பேரவை வெளிப்படுத்தியதை அன்று முஸ்லிம் சமூகத்தின் சகல மட்டத்தினராலும் கண்டனத்துக்கு உட்படுத்தப்பட்டதும் அந்த வரைபு விடயமாக விமர்சிக்கப்பட்டதும் அறிந்தது.

அது மாத்திரமின்றி பேரவையின் திருகோணமையில் நடந்த நிர்வாகக் கூட்டம் ஒன்றில் முழுக்க முழுக்க தீவிர போக்கும் வட கிழக்கு இணைப்பும் அதிகாரப் பகிர்வும் தான் தமிழர்களின் தீர்வாகும் எம்மை அடிபணிய வைக்க முடியாது தமிழ் மக்கள் போராட்டத்தை ஒரு பொருட்டாக கருதாதவர்கள் என்றும் அதனுடன் முஸ்லிம் சமூகத்தை பற்றியும் முஸ்லிம் சமூகத்தின் அரசியலை எப்படி கொச்சைப்படுத்திருக்கின்றார் என்பதை பாருங்கள்.

முஸ்லிம் மக்கள் பண்டமாற்று அடிப்படையிலேயே தமது அரசியல் உரிமைகளை பெற்றெடுத்து வருகிறார்கள். இன்று நாம் உங்களுக்கு இந்த உதவியை அளித்தால் இவ்விவற்றை நீங்கள் எமக்கு தருவீர்களா ? என்று கேட்டு பெற்று வருகிறார்கள் ஆனால் நமது பரம்பரை ஆணவமும் மிடுக்கும் அவ்வாறான பண்டமாற்றத்தை வரவேற்பதில்லை.

நாம் இந்த நாட்டின் நிரந்தர குடிமக்கள் இன்னொருவருடன் பண்டமாற்றத்தில் ஈடுபட எமக்குத்தேவை இல்லை. இவ்வாறன கடும் போக்குடன் ஒரு முகத்தையும் அவ்வப்போது மிதமானமுகத்தை மறுபக்கத்தில் காட்டுவதும் இவருடைய அரசியலாகும்.

வட மாகாண மக்களின் அதிக வாக்குகளை பெற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது பல குற்றச்சாட்டுக்கள் ; சுமத்தப்படுகின்றன இவை அனைத்துமே யதார்த்தமானதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களால் அடிக்கடி சுட்டிக்கட்டப்பட்டுள்ள சம்பவங்களும் உண்டு அதாவது ஓரிரு மாகாண சபை அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்டித்தும் அவர்களின் விடயங்கள் தொடர்பாகவும் “வினைத்திறனான மாகாணசபை” மற்றும் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுதல்” ஆகிய இரண்டு விடயங்கள் வலியுறுத்தி வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 2015ம் ஆண்டின் ஆரம்பத்திலே வடக்கு மாகாணசபையினை சீரான பாதையில் ஒழுங்கமைக்கும் நோக்குடன் 24 மாகாணசபையின் ஆளும்தரப்பு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு முதலமைச்சர் அவர்களுக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்கள்.

2015 பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டமை..விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக தன்னுடைய நிலைப்பாட்டினை வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பமாகும், அப்போது அவர் எந்தவொரு தேர்தல் மேடைகளுக்கும் செல்லவில்லை, இறுதி சந்தர்ப்பத்திலே ஒரு அறிக்கை வெளியிட்டார், அதிலே “ வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து மாற்றத்திற்காக வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார், இது மறைமுகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்காதீர்கள் என்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்தியது என்று . கூட்டமைப்பினால் பல இடங்களிலும் சுட்டிக்கட்டப்பட்டது.

2015 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் முறையாக வாக்களித்து தம்முடைய முழுமையான ஆதரவினை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்க்கு ஆணை வழங்கிய பின்னரும், தவறான முறைகளினூடாக மக்களை பிழையாக வழிநடாத்தி, மக்களை உணர்ச்சியூட்டி நடாத்தப்பட்ட “எழுக தமிழ்” போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றமையும், அதற்கு மாகாணசபையின் வளங்களைப் பயன்படுத்தியமையும் அடுத்த பாரிய தறான நடவடிக்கையாகும், இவ்வாறான நிகழ்வுகளினூடாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் சென்று தமிழ் மக்களை வன்மம் சார்ந்த, தீவிர இனவாதம் சார்ந்த, மக்களை அழிவுநோக்கி வழிநடாத்த முயலும் தீய சக்திகளுக்கு பக்கபலமாக செயற்பட்டார்

மக்கள் நலன்சார்ந்த மாகாண அரசாங்கத்தின் எத்தனையோ செயற்திட்டங்களையும், மத்திய அரசாங்கத்தின் செயற்திட்டங்களையும் தன்னுடைய பலவீனங்களின் மூலமாக தன்னுடைய தீவிரவாத அணுகுமுறைகளை நியாயப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக அரச திட்டங்களை மறுதளிக்கின்றமை, ஒத்துழைக்காமை.

இதிலே முதன்மையாக ஐக்கிய நாடுகளின் சபையின் வடக்கு மாகாணத்திற்கான 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவித்திட்டம் திருப்பியனுப்பப்பட்டமை, மாகாணத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு விவசாய, மற்றும் முதலீட்டுத்திட்டங்கள் திருப்பியனுப்பப்பட்டமை, இரணைமடு நீர்ப்பாசனத்திட்டத்திலே ஏற்பட்ட வீணான குழப்பங்கள், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை பாதுகாக்க முயன்றமை போன்றன முதலமைச்சர் மீது முன்வைக்கப்படும் பாரிய குற்றச்சாட்டுக்களாகும்.

ஆளும் கட்சி உறுப்பினர்களால் சபை அமர்வுகளில் முதலமைச்சருக்கு எதிராக பல ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தது அவருடைய வீட்டுக்கான மாதாந்த வாடகை மூன்று இலட்சம் அந்த வீட்டுக்கான தளபாட கொள்முதலுக்கு எட்டு இலட்சமும் மாகாண நிதியில் இருந்து முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டும் அவருக்கு விசுவாசமான அமைச்சர்களுடன் சேர்ந்து கொண்டு நடந்த அதிகார துஸ்பிரயோகம் ஊழல் முறைகேடுகளும் சுமர்த்தப்பட்ட நேரத்தில்தான் இந்த பிரச்சனைகளில் இருந்து தன்னையும் தனது விசுவாசிகளையும் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் இலங்கையில் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான விடயமாக இருக்கின்ற அரசியலமைப்பு மாற்றம் முன்வைக்கப்படவிருக்கின்றது.



இச்சுழ்நிலையில் குறித்த அரசியலமைப்பு மாற்றம் சார்ந்த விடயத்தில் மக்களை குழப்பியடித்து அரசியல் தீர்வுக்கு எதிராக மக்களைத் திருப்பவேண்டும் என்ற நிலைப்பாட்டில் 2017 ஜூன் மாதமளவில் வடக்கு மாகாண அமைச்சர்களின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி அவர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கி, தன்னுடைய தீவிர எண்ணங்களுக்கு துணை நிற்கின்றவர்களை அமைச்சர்களாக்கி அதன்மூலம் மாகாணசபையின் அதிகாரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சித்தார்.

குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் ஒருவரை பாதுகாப்பதற்காக மற்ற அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களுக்கு எதிரான விசாரணை குழுவை அமைத்து அவர்களை விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களில் இருவர் குற்றம் அற்றவர்கள் என்ற விசாரணைகள் முடிவுகள் வந்த பின்னரும் அவர்களை பதவி விலகும்படி வற்புறுத்தினார்.

இதனால் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளாலும் முதலமைச்சரின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிராகவும் முதலமைச்சர். விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு. வட மாகாண சபையில் உள்ள 38 உறுப்பினர்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இதை சற்றும் எதிர்பாரத முதலமைச்சருக்கு பல சங்கடங்களை ஏற்பத்தியது இருந்தும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக் எதிராக தமிழ் மக்கள் பேரவையின் உதவியுடன் மக்களை வீதிக்கு இறக்கி பல போராட்டங்களை நடத்தி கூட்டமைபின் தலைமைக்கு பல அழுத்தங்களை கொடுத்ததன் விளைவாக தற்போதைய நாட்டின் அரசியல் சுழலில் முதலமைச்சரின் நம்பிக்கையில்லா தீர்மானம் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக அவை சுமுகமான முறையில் வாபஸ்பெறப்பட்டது.

இவரின் அதிகார வரம்பு மீறல் ஒருபுறமும் மறு புறத்தில் தமிழ் மக்கள் பேரவையின் இனவாத அரசுக்கு எதிரான கருத்துக்களையும் தொடந்து முன்னெடுத்துக் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழையான பாதையில் செல்கின்றது என்றும் முதலமைச்சர் தனது பக்க நியாயத்தை கூட்டமைப்புக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து கொண்டு மக்களுக்கு சொன்னாரே தவிர கூட்டமைப்பின் தலைமகளோடு நேரடியாக கலந்துரையாடுவதை தவிர்த்துக் கொண்டு கூட்டமைப்பினால் பெற்றுத்தரப்பட்ட முதலமைச்சர் பதவியை என்னும் மகுடத்தை தன் தலையில் சுமந்துகொண்டு தன்னுடைய நயவஞ்சகத்தனத்தை அரங்கேற்றுவதில் மிகவும் தீர்க்கதரிசனமானவர்.

இவரின் இரட்டை முகச்செயற்பாடுகளை கண்டித்து கூட்டமைப்பத் தலைமைகள் நேரடியாகவும் பத்திரிகைகளிலும், இணைய செய்திகளிலும், புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளிலும் இவரை முதலமைச்சர் பதவியை விட்டு விலகிக் கொண்டு அதன் பின் தன்னுடைய அரசியலையும் இனவாத சிந்தனையையும் அரசுக்கு எதிரான போராட்டங்களையும் தமிழ் மக்கள் பேரவையையும் கூட்டமைப்புக்கு எதிரான தலைமத்துவத்தையும் தமிழ் மக்களின் தீர்வுக்கான அரசியல் வழிமுறையையும் முன்னெடுங்கள் என்று கூட்டமைப்பால் கூறப்பட்டும் இதுவரை எதையும் காதில் கேட்காமல் அவருடைய இனவாத பக்கச்சார்பான அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அடுத்த சமூகங்களை மதிக்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக அறிக்கை விடுவதும் வாழும் பிரதேசங்களில் பக்கச்சார்பாக நடந்து கொள்ளுதல் அதிகாரத்தை பயன்படுத்தி சபையில் தீர்மானங்களை கொண்டுவருதல் போன்ற விடயங்களில் மிகவும் கவனமாக செயற்படக்கூடியர் அந்த வகையில் தான் வட –கிழக்கு இணைப்புக்கு ஆதரவாக தீர்மானத்தை சபைக்கு கொண்டு வந்து அதனை அவசரமாக நிறைவேற்றிக் கொண்டார்

என்ற வரலாற்று நிகழ்வாக இன்றும் உள்ளது. ஆக சிறுபான்மையான முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் இருக்கும் சில நல்ல நோக்கப் பார்வையை விட இவரிடம் இருக்கும் கடும் போக்கு பார்வையும் இனவாத செயற்பாடும் குறுகிய மனப்பான்மையும் அதிகம் மேலே சுட்டிக் காட்டிய விடயங்களை வைத்து புரிந்து கொள்ளமுடியும்.

ஆகவே விக்னேஸ்வரன் அவர்கள் இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பாக வெளியிட்ட கருத்தும் அவரின் செயற்பாடுகளைப் பற்றி எல்லோரும் சிலாகித்துக்கொண்டாலும் அதன் பின்னால் இருக்கின்ற அரசியலும் அவரின் இனவாத கருத்தும் தமிழ் மக்கள் பேரவையின் தாக்கமும் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கு கட்டுபடாத செயற்படும் உள்ளது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

தமிழ் மக்களை பொறுத்தவரை முப்பது வருட யுத்தம் அதனால் சந்தித்த வடுக்களும் இழப்புகளும் அதன் பின் நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திற்காக தமிழ் மக்களின் பங்களிப்பு அதன் பின் ஏற்பட்ட அரசின் சில நல்லனென்ன செயற்பாடுகள் என பல விடயங்கள் கூட்டமைப்பின் தலைமைகள் சிங்கள தலைவர்களிலும் பேரினவாத கட்சிகளிலும் மீது ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சாதகங்களை பயன்படுத்தி தமிழ் அரசியல் தீர்வு அதிகார பகிர்வு அரசியல் அபிலாசை ஏனைய நிர்வாக விடயங்களை அடைந்து கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பும் அதன் தலைமைகளும் உள்ளனர் .




(தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்கள் அவர்கள் கேட்கக் கூடியவர்களிடம் கேட்கின்றார்கள் இதை நாம் சரியா பிழையா என்று நியாயப்படுத்த வில்லை இவிடத்தில் அதுவல்ல நோக்கம் ) அவைகளை கவனத்தில்கொண்டுதான் கூட்டமைபின் தலைமைகள் தற்போது அரசு கொண்டுவந்த திருத்தச்சட்டங்கள் தேர்தல் முறை மாற்றங்கள் போன்ற விடயங்களில் அரசுக்கு நிபந்தனை ரீதியாக ஆதரவுகளை வழங்கி உள்ளார்கள்.




கூட்டமைப்பின் தலைமைகள் சமர்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக அரசுக்கும் அதற்கு உரிய தரப்பிற்கும் தங்களுடைய ஆதரவுகளை வழங்கும் போது கூட தெளிவான விடயங்களை கூறிக் கொண்டுதான் இந்த அரசுக்கு ஆதரவான விடயங்களில் பங்களிக்கிறார்கள் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட போது கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் அவர்கள் “புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, அரசியலமைப்பின் தரத்தைக் குறைப்பதற்கு ஒருபோதும் நாம் தயாரில்லை என்றும் அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு நிறைவானதாக இல்லை என்றால் அதனைப் புறக்கணிக்கவிருப்பதாகவும் அத்துடன்







எமது மக்களை நாம் விற்பதற்குத் தாம் ஒரு போதும் தயாரில்லை என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் நன்கு அறிவார்கள்” என்றும் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று இலங்கைக்கு கிடைத்துள்ளது ,இதனை பயன்படுத்தி நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் பேசும் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நீண்டகால இலக்கை அடைய இதுவே வழியாகும் எனவும்.




மேலும் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் .சம்பந்தன் அவர்களால் தெரிவிக்கப்பட்டதையும் நினைவு படுத்திப் பார்க்க முடியும்.




ஆகவே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கடும் போக்கு இனவாத அரசியலுக்கும் .சம்பந்தனின் மித வாத அரசியலுக்கும் இடையிலான போராட்டமாகவும் அடுத்த தலைவருக்கான போட்டியாகவும் விக்னேஸ்வரனின் செயற்பாட இருப்பதையே தமிழ் மக்களும் ஏற்றக்கொள்கின்றார்கள்.




ஆகவே கூட்டமைப்பின் எதிர்பார்ப்பும் மக்களின் தேவையையும் வடமாகாணத்தின் அடிப்படை விடயங்களையும் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து செயற்பட வேண்டிய முதலமைச்சர். இன்று அதற்கு மாற்றமாக சில புலம்பெயர் அமைப்புகளின் நிகழ்சி நிரலுக்கும் கடும்போக்கு இனவாதிகளின் சுயநலத்திற்கும் செயற்படும் மனிதராக மாறிவிட்டார் என்பது மட்டும் அவரின் செயற்பாடுகளை உண்னிப்பாக கவனித்தால் அதன் உண்மை புலப்படுகின்றது.




விக்னேஸ்வரின் பிரச்சனைகள் கூட்டமைப்புக்கு எதிராக உச்சகட்டம் அடைந்து இருந்த நேரத்தில் புலம்பெயர் அமைப்பினால் நடத்தப்படுகின்ற தொலைக்கட்சி நிகழ்சி ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவரின் இன்றைய அரசியல் நிலைப்பாட்டை நான் நேரடியாக சொல்கின்றேன் என்று சுமந்திரன் அவர்கள் கூறினார்கள்.




“பதவியோ பட்டமோ அதிகாரமோ எனக்கு தேவையில்லை இப்போது இருக்கின்ற இந்த அரசாங்கத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைக்கு தீர்வென்றை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொற்றுக் கொடுப்பத்துதான் எனக்குள்ள தற்போதைய கடமையே தவிர இவ்வாறான அரசியல் பிளவுகளை பயன்படுத்தி இன்னும் இன்னும் எம்மக்களை துயரத்தில் ஆற்றி அவர்களை வைத்து அரசியல் செய்ய பழக்கப்பட்ட தலைவன் நான் அல்ல என தெரிவித்ததாக அந்த போட்டியில் சுமந்திரன் அவர்கள் கூறுகின்றார்.




ஆகவே இவைகளை எல்லாம் வைத்துப்பார்க்கும்போது அனுபவமுள்ள நீதிபதி நீதிக்காக செயற்படுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு நீதியை குழிதோண்டி புதைத்து விட்டு பதவி அதிகாரத்திற்காகவே நீதியை நிலைநாட்ட முற்படுகின்றாரே தவிர மக்களுக்கான நீதியை நிலைநாட்ட முன்வரமாட்டார் என்பது மட்டும் அவரின் செயற்பாடுகளை வைத்து அவதானிக்க முடிகின்றது.




“உள்ளத்தில் ஏற்படுகின்ற தூய்மையான நல்ல எண்ணங்கள்தான் எதிர்காலத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றது”




BY: Mohamed Ansar & Naspf Lanka
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -