எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் தேசிய வாசிப்பு மாதத்தினை விளிப்பூட்டுவோம் எனும் தொனிப்பொருளில் சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் ஏற்பாட்டில்; நடைபெற்ற சித்திரப் போட்டி சம்மாந்துறை பிரதேச சபை செயலாரும் விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீம் தலைமையில்; நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, எம்.எம்.முனவர், வீ.சீ நூலகத்தின் நூலகர் ஏ.வீ.எம்.சர்ஜூன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமீர் அலி பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 100 பாடசாலை மாணவர்களுக்கு இலவச அங்கத்துவம் வழங்கிவைக்கப்பட்டது.