பிரோஸ்-
காலஞ்சென்ற முஸ்லிம் காங்கிரஸ் மூத்த போராளியும் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான எம்.ரி. ஜப்பார் அலியின் நினைவாக, விசேட அல்குர்ஆன் தமாம் வைபவமும் துஆ பிரார்த்தனையும் இன்று (14) நிந்தவூரிலுள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஜப்பார் அலி அவர்கள் பயணித்த வாகனம் திருகோணமலையில் விபத்துக்குள்ளானபோது, அவருடன் கூடச்சென்றிருந்த கட்சி உறுப்பினரான யூசுப்லெப்பை பரீத் அவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இன்று அவரது வீட்டுக்குச் சென்ற ரவூப் ஹக்கீம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.