கடந்த கால யுத்தத்தினால் அழிவடைந்த நிலையில் இருந்த யாழ் சின்னப்பள்ளிவாயல் மையவாடி தேவைக்கென ஆரம்ப புழக்கத்தில் இருந்துவந்த மடம் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜனாஸா நல்லடக்க்கத்தை நோக்கமாக கொண்டு மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ் ஐக்கிய விளையாட்டு கழக தலைவர் நபாயிஸ் செயலாளர் ராஜன் மற்றும் நிர்வாகத்தினரின் முயற்சியில் குறித்த மடம் புனரமைக்கப்பட்டு மீண்டும் யாழ் சின்னப்பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மடம் கையளிக்கும் நிகழ்வில் யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் எம். சேஹு ராஜித் யாழ் ஐக்கிய விளையாட்டு கழக தலைவர் எம்.ஐ நபாயிஸ் யாழ் ஜனாஸா நலன்புரி சங்க தலைவர் எம்.ஜெ.எம் முஜாஹித் யாழ் சின்னப்பள்ளிவாயல் செயலாளர் எம்.எல் நிராஸ் மற்றும் பேஸ் இமாம் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேற்படி மடத்தின் கட்டுமான பணிகளுக்கான முழு செலவீனத்தையும் எஸ்.எச் நியாஸ் ஹாஜியார் மேற்கொண்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.