சில அமைச்சர்கள் சாதாரண ஹோட்டல்களில் சாப்பிடுவதும் பஸ்களில் பயணிப்பதும் தோட்டங்கள் செய்வதும் வீடுகள் துப்புரவு செய்வதும் என சாதாரண மக்களைப்போல் வாழத்தான் செய்கிறார்கள்.
இப்படி எல்லா அமைச்சர்களிடமும் கீழ் மட்ட மக்களின் ஏதேவொரு வாழ்க்கை இருக்கத்தான் செய்கிறது.அப்படியொரு பழக்கம் நம்ம அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் உள்ளதாம்.
கம்பஹா மாவட்டத்தில் தெல்கந்த எனும் இடத்தில் வாரா வாரம் கூடும் சந்தைக்குப் போகும் பழக்கம் அமைச்சருக்கு உண்டாம்.
கம்பஹாவில் இருக்கும்போது தவறாமல் சந்தைக்குச் சென்று மக்களோடு மக்களாகச் சேர்ந்து சாதாரண ஒருவர்போல் பொருட்களைத் தேடித் தேடி வாங்குவாராம்.
இதன்மூலம் மக்கள் படும் மற்றும் கஷ்டம் நாட்டின் பொருளாதார நிலைமை போன்றவற்றை அவரால் இலகுவாக அறிய முடிகிறதாம்.
ம்ம்.. அறிந்து என்ன பயன்?