அகமட் எஸ். முகைடீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் 3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட ஆடுகள அபிவிருத்தியினை ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதி தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக் குழு நேற்று (28) சனிக்கிழமை நேரடி விஜயம்செய்து பார்வையிட்டனர்.
இவ்விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் சம்பத் திசானாயக்க, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இப்பாடசாலையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளில் ஒன்றான குறித்த கூடைப்பந்தாட்ட ஆடுகளத்தின் கூரையினை விரிவுபடுத்துவது உள்ளிட்ட மேலும் சில அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த வேலைத்திட்டத்திற்கான திட்ட வரைபினை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் ஹரீஸ் பாடசாலை சமூகத்தைக் கேட்டுக்கொண்டார்.