எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலையொட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசத்தில் மேலும்
வலுப்படுத்தவென அப்பகுதிகளுக்கு புதிமாக நியமிக்கப்பட்ட தொகுதி
அமைப்பாளர்களுடன் தினமும் கூட்டங்கள் நடாத்தப்பட்டுவருகின்றன.
அமைப்பாளர்களுக்குப் பொறுப்பான கட்சியின் சிரேஸ்ட்ட சட்டத்தரணி சம்பாணி
மற்றும் முக்கியஸ்தர் திசாநாயக்க ஆகியோர் இச்சந்திப்பகளை
நடாத்திவருகின்றனர்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதத்திரக்கட்சி தலைமையகத்தில்
இச்சந்திப்புகள் நடைபெற்றுவருகின்றன.
பொத்துவில் தொகுதிக்கான கூட்டம் 23) திங்கட்கிழமை நடைபெற்றது.
பொத்துவில் தொகுதியின் பிரதேச அமைப்பாளர்களான வீ.கிருஸ்ணமூர்த்தி
(காரைதீவு) கே.ரகுபதி(ஆலையடிவேம்பு) உபைத்துல்லா(அட்டாளைச்சேனை)
சபீல்(நிந்தவூர்) உள்ளிட்ட 5அமைப்பாளர்கள் சமுகமளித்திருந்தனர்.
கூட்டத்தில் இனிவரும் காலத்தில் மக்களுடன் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்
என்பது பற்றியும் அமைப்பாளர் அலுவலகம் கடிதத்தலை ஊடகமாநாடு தொடர்பாக
விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் தொடர்பாக விரிவாகப்பேசப்பட்டது. வட்டாரங்களில்
தெரிவுசெய்யவேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பாகவம் அவர்களின் தரம்
தொடர்பாகவும் எடுத்துக்கூறப்பட்டது.
அம்பாறை கரையோரப்பிரதேசத்தின் கல்முனைத்தொகுதிக்கான அமைப்பாளர்கூட்டம்
கடந்த (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
றே;றுமுன்தினம் மாலை சம்மாந்துறைத் தொகுதிக்கான கூட்டம் இடம்பெற்றது.