கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புமுகமாக
வேலையில்லாப்பட்டதாரிகளுக்காக நடாத்திய திறந்த போட்டிப்பரீட்சையின்
பெறுபேறுகள் வெளியாகிய மறுநாளே நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக்கடிதங்கள்
அனுப்பப்பட்டுவருகின்றன.
இந்நேர்முகப்பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் 10ஆம் 11ஆம்
திகதிகளில் திருகோணமலையிலுள்ள பொதுச்சேவை ஆணைக்குழுக் ;காரியாலயத்தில்
காலை 8.30மணியிலிருந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின்
செயலாளர் கே.ஜி.முத்துபண்டா அறிவித்துள்ளார்.
குறித்த பரீட்சையில் 2868 பட்டதாரிகள் சித்திபெற்றுள்ளதாக இணையத்தளத்தில்
பெயர்விபரங்கள் புதனன்று குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் கிழக்கில் 1440
வெற்றிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு இவ் அழைப்புக்கடிதங்களை பாடவாhரியாக
குறிப்பிட்ட பட்டதாரிகளுக்கு அனுப்பிவருகின்றது.
பொதுவான சித்தி என்பது ஒவ்வொரு பாடத்திலும் 40 என இருந்தாலும்
பாடத்திற்கு ஏற்ப வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின்
உயரதிகாரி தெரிவித்தார். அதற்கேற்ப நேர்முகப்பரீட்சைக்கு
அழைப்புக்கடிதங்கள் அனுப்பப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருவேறு பரீட்சைகள்!
இலங்கை ஆசிரியர் சேவைப்பிரமாணக்குறிப்பிற்கமைவாக பட்டதாரிகளின்
சான்றிதழ்களை பரிசோதிப்பதற்காக நேர்முகப்பரீட்சையும்
திறன்களைப்பரீட்சிக்க பிரயோகப்பரீட்சையும் நடாத்தப்படவிருக்கின்றன.
நேர்முகப்பரீட்சையின்போது கொண்டுவரவேண்டிய ஆவணங்கள் பற்றி செயலாளர்
முத்துபண்டா குறிப்பிட்டுள்ளார்.
க.பொத. சா.த. மற்றும் உ.த சான்றிதழ்களுடன் 21.08.2017க்கு முன்பு
பெறப்பட்ட பட்டச்சான்றிதழ் கொண்டுவரவேண்டும் எனக்கேட்கப்பட்டுள்ளது.
மேலும் 06மாதங்களுள் பெற்ற விதிவிடச்சான்றிதழ் பிறப்புச்சான்றிதழ்
விவாகச்சான்றிதழ் நற்சான்றிதழ் என்பன கொணரப்படவேண்டும்
எனக்கேட்கப்பட்டுள்ளது.
இவற்றின் மூலப்பிரதி மற்றும் நிழற்படப்பிரதி கொணரப்படவேண்டும். தவறினால்
பிறிதொரு நேர்முகப்பரீட்சை நடாத்தப்படமாட்டாது எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தினத்தில் 5நிமிடத்திற்கு பிரயோகப்பரீட்சை நடாத்தப்பட ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. அதற்காக வாய்மொழிமூல சமர்ப்பணத்திற்கு தயாராக
வரவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.
வாய்மொழிச்சமர்ப்பணத்தின்போது பிரவேசம் ஆளுமை தொடர்புசாதன விளக்கம்
நேரமுகாமைத்துவம் சமர்ப்பணத்திறன் என்பன பரீட்சிக்கப்படும். அதற்கான
புள்ளி 25ஆகும். குறைந்தது 10புள்ளிகள் பெறப்பட்டால்தான் நியமனத்திற்கு
தகுதி பெற்றவராவார்.
ஆங்கிலப்பாடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் ஆங்கிலமொழிமூலம் தோற்றவேண்டுமென்பது நியதி.
எதுஎப்படியிருப்பினும் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றுவதென்பது நியமனம்
உறுதி செய்யப்பட்டுள்ளதாகக்கருதக்கூடாதென்றும் அடியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.