கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரொட்ரிகோவின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வத்தளை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திவுலபிடிய பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரொட்ரிகோவின் வீட்டில் இருந்து, ரவைகள் மற்றும் குண்டு துளைக்காத கவச சட்டை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ரன்டீர் ரொட்ரிகோவின் மனைவியான இந்தியப் பிரஜை ஹர்ஜோர்ட் கோர் வத்தளை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
(அததெரண)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -