பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் நிதி பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டில் ஏறாவூர் யூ.எல்.தாவூத் பவுணடடேசன் அமைப்பின் கட்டத்திற்கான தரையோடு பதித்தல் மற்றும் நீர் இணைப்பு போன்ற புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (29.10) பவுண்டேசன் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் பொறியிலாளர் எம்.ஏ.சி.றஸ்வி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின்போது பாரளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந் நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முன்னால் நகர முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லிம் சாலி ஹாஜியார் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நளீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.