அதாவுல்லாஹ் சேர் வெற்றி பெற வேண்டும் என்பது அவரின் ஆதரவாளிகள் விரும்புகின்றனர் அதுபோல் நானும் விரும்புகிறேன் ஆனால் அவர் அம்பாறையில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் இருக்கும் போது தனது எதிர் கால வெற்றியை உறுதிப்படுத்த அம்பாறை மக்களின் ஆதரவு முதலில் அதாவுல்லாஹ் அவர்களுக்கு தேவை அதை அவர் அம்பாறை மாவட்டத்தில் முதலில் செய்ய வேண்டும் இதை விடுத்து நடக்காத காரியத்துக்காக வட மாகாணம் சென்று போராடுவதில் எந்த வெற்றியும் கிடைக்க போவதில்லை
தான் கெட்டாலும் மற்றவன் நல்லா வாழக் கூடாது என்ற நோக்குடன் செய்யும் அரசியல் என்பது மக்கள் அரசியல் அல்ல அது சுயநலவாதிகளின் அரசியல் இப்படி நயவஞ்சக அரசியல் செய்பவர்கள் அரசியல் வாழ்க்கையில் விரைவில் மரணித்து விடுவார்கள் இந்த நிலை இது வரை அம்பாறை மாவட்டத்தில் மக்களை ஏமாற்றியவர்களுக்கு வந்துள்ளது
அமைச்சர் றிசாத் அவர்களின் கட்சி இன்று மக்கள் விரும்பும் பலம் கொண்ட சக்தியாக உள்ளது அவரது அரசியலால் மட்டுமே சமுதாயத்தை இனி பாதுகாக்க முடியும் என்ற நிலையில் அவர் அம்பாறையில் அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அதை மக்களும் விரும்புகின்றனர் ஆனால் அரசியல் வியாபாரிகள் விரும்பாமல் இருப்பதற்கு மக்கள் ஒன்றும் செய்ய முடியாது.
அதாவுல்லாஹ் அவர்கள் வட மாகாணம் சென்று பிரச்சாரம் செய்து ஒரு ஆயிரம் வாக்கு பெறுவதே கஸ்டம் இப்படியான நிலையில் மற்றவனை ஏன் குழப்பனும் அது தான் மக்களுக்குள் எழுகின்ற கேழ்வியாக உள்ளது
அடுத்து அதாவுல்லாஹ் அவர்கள் அரசியலில் நம்பி இருப்பது மக்களை அல்ல அவர் நம்பி இருப்பது அவரது குருவான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை தான் .அவரின் உதவியால் தான் கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று தனது ஊரை அழகுபடுத்தினார் அதற்கான நன்றியுடன் இன்றும் அவர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றியுடன் இருப்பதில் எந்த வித தப்பும் இல்லை என்றுதான் கூற வேண்டும்
ஆனால் அரசியல் என்பது மக்கள் மனமறிந்து அரசியல் செய்ய வேண்டும் இதை புறியாமல் கடந்த தேர்தலில் மக்கள் மைத்திரியை ஆதரிக்க இருந்த போது அதாவுல்லாஹ் அவர்கள் மஹிந்தயை ஆதரித்தார் அதனால் முஸ்லிம் சமுதாயம் அவரை புறக்கணித்தது அதனால் அவர் மஹிந்த ஆதரவு சிங்கள மக்களின் அதிக வாக்குடன் தோல்வியடைந்தவர் தனது தோல்விக்கு அமைச்சர் றிசாத் அவர்களின் வருகையே காரணம் என நினைத்துக்கொண்டு இன்று பகைமை கொண்டாடுகின்றார் வட மாகாணம் சென்று இது வரவேற்கதக்க விடயம் அல்ல.
கடந்த தேர்தலில் மக்கள் முடிவுக்கு அமைய மைத்திரியை அதாவுல்லாஹ் ஆதரித்து இருந்தால் சிங்கள முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று இருப்பார் மயிலுக்கு ஒரு ஆசனம் கிடைத்து இருக்கும் மரத்துக்கும் ஒரு ஆசனம் தான் கிடைத்து இருக்கும் அதாவுல்லாஹ்வின் முடிவால் தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேற்பாளர்கள் மூன்று பேர் தெரிவாகி இன்று சமுதாயத்தை அழித்து கொண்டு இருக்கின்றனர் இந்த தவறை செய்த அதாவுல்லாஹ் இன்று மேடை போட்டு பல ஊர்களில் குற்றம் சுமத்த வேண்டியவர்கள் எங்கேயோ இருக்க அமைச்சர் றிசாத் மீது குற்றம் சுமத்துவது வேடிக்கை இதை மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
கடந்த காலங்களில் அதிகாரம் கொண்ட பல அமைச்சு பொறுப்புகளை வகித்த அதாவுல்லாஹ் அவர்கள் தனது ஊரை விட மற்ற பிரதேசங்களில் மக்கள் நலன் கொண்ட எந்த சேவையும் செய்யவில்லை என மக்கள் இன்றும் கூறுகின்றனர் ஆனால் அவரின் கட்சியில் இருக்கும் முன்னாள் மாகான சபை உறுப்பினர் உதுமாலெப்பை அவர்கள் கிழக்கு மாகாண சபை மூலம் நீர்ப்பாசன,வீதி, அபிவிருத்தி வேலைகளை மக்களுக்கு செய்துள்ளார் அத்தோடு படித்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளும் வழங்கியுள்ளார் அவரின் சேவையை இன்றும் மக்கள் நினைவு கூர்ந்து பேசுவதை கேட்க முடிகிறது உதுமாலெப்பையின் சேவையை மறக்க முடியாது .
ஆனால் அதாவுல்லாஹ் அவர்களின் அரசியல் காலத்தில் வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் கஸ்டப்பட்டனர் அவர்களை சென்று கூட பார்த்து இருப்பாரா? என்று அவரால் கூற முடியுமா ? முடியாது அவர் நீர் வழங்கல் அமைச்சராக இருந்த போது தனது இனத்தவர் அகதிகளாகவும் குடிநீர் கூட இல்லாத மக்களாக இருந்தனர் அவர்களுக்கு தனது அமைச்சு மூலம் எதாவது உதவி செய்தாரா?அதுவுமில்லை இப்படி இருந்து விட்டு தேர்தல் நெருங்கும் போது தன் மீது அன்பாக இருப்பவனை தனது எதிரியாக நினைத்து வட மாகாணம் சென்று அமைச்சர் றிசாத் வட மாகாண மக்களுக்கு என்ன செய்துள்ளார் என்று கேட்பது எந்த வகையில் நியாயம் ? தனித்து நின்று தன்னால் முடிந்த அளவு அபிவிருத்தி செய்து அகதிகளை மீள்குடியேற்றம் செய்துள்ளாரே அமைச்சர் றிசாத் அவர்கள் அது அதாவுல்லாஹ் சேரின் கண்களுக்கு தெரியவில்லையா? கண்ணாடி அனிந்தால் உங்கள் சந்தேக பார்வைகள் நீங்கி விடும் அதன் பின் அமைச்சர் றிசாத் அவர்களின் மக்கள் சேவை உங்களுக்கு புரியும்.
அம்பாறை மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதியாக இதுவரை இருந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி அரசால் கட்டபட்ட வீட்டுத்திட்டத்தை அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத பெறுமதியற்ற அமைச்சராக இருந்துள்ளார் ஆனால் அகதிகளின் துன்பம் அறிந்த வன்னி மகன் றிசாத் அம்பாறை வந்து சுனாமி வீடுகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சி செய்யும் போது ஏன் வந்தாய் என்று வீராப்பு பேசுவது எந்த வகையில் நியாயம் ?அன்று அமைச்சர் பேரீயல் அஸ்ரப் அவர்களோடு கொண்ட பகைமையால் பேரினவாத மக்களை ஏவி விட்டு அகதிகளுக்கு வீடு கொடுக்க முடியாமல் தடுத்தது யார் அது நியாயமா ?
எனவே அதாவுல்லாஹ் சேர் அவர்களிடம் உள்ள துணிவை பாராட்ட வேண்டும் ஆனால் அது அன்மை காலமாக தவம் ஐயாவிடம் கூட பழிக்கவில்லை அதனால் அதாவுல்லாஹ் அவர்கள் நம்பி இருக்கும் சிங்கள மக்களின் வாக்குகள் இனிமேல் கிடைக்காது வருவதே தொகுதிவாரியான தேர்தல் அதில் அதாவுல்லாஹ் அவர்கள் மீண்டும் தோல்வியை தழுவுவது உறுதி அதை தடுக்க அவர் தம்பி என்று அழகாக பேசும் அமைச்சர் றிசாத் அவர்களோடு இனைந்தால் மட்டுமே முடியும் அதன் மூலம் வெற்றி பெறலாம் என்பதை மறந்து விடக்கூடாது
இன்று நல்லாச்சிக்கு முஸ்லிம் மக்களிடையே சிறு எதிர்ப்பு உருவாகி மஹிந்த பக்கம் காற்று வீசுகிறது அதனை பயன்படுத்தி அம்பாறை தொகுதி மஹிந்த ஆதரவு சிங்கள மக்களின் வாக்குகளையும் முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் பெற்று மீண்டும் பாராளுமன்றம் போகலாம் என அதாவுல்லாஹ் அவர்கள் நினைத்து அமைச்சர் றிசாத் அவர்களை விமர்சனம் செய்யலாம் அது ஒன்றும் நடக்கப்போவதில்லை வருவதே தொகுதி வாரியான தேர்தலே அன்றி மாவட்ட தேர்தல் இல்லை அதனால் சம்மாந்துறை பொத்துவில் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும் அக்கறைப்பற்று மண்ணில் இருந்து எவரும் வெற்றி பெற முடியாது இது முன்னோர் கண்ட அனுபவம்
தொகுதி வாரியான தேர்தலில் பொத்துவில் தொகுதியில் போட்டியிடும் நிந்தவூர் அட்டாளைச்சேனை ஆகிய ஊர்களிலிருந்து போட்டியிடும் வேற்பாளர்களே வெற்றி பெறுவது இயற்கை என்பதால் அதாவுல்லாஹ் அவர்கள் வெற்றி பெறுவது என்றால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அமைச்சர் றிசாத் அவர்களோடு இனைந்து அரசியல் செய்வதே சிறந்தது இதை விடுத்து அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக நாடு பூராக பிரச்சாரம் செய்தாலு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை
அதாவுல்லாஹ் அவர்களின் தற்போதைய பிரச்சார பணிகளை நோக்கும் அமைச்சர் றிசாத் அவர்களை வீழ்த்த அரசியலில் நன்பனுமில்லை பகைவனுமில்லை என்ற வகையில் றவூப் ஹக்கிமுடன்
இனைந்து செயல்பாடுகின்றாரா ?என சந்தேகம் எழுகின்றது எத்தனை கூட்டுக்கள் உருவானாலும் மக்கள் படையுடன் இருக்கும் அமைச்சர் றிசாத் அவர்களை அல்லாஹ்வை தவிர வேறு எவராலும் வீழ்த்த முடியாது
இன்றைய அரசியல் சூழ்நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை அமைச்சர் றிசாத் அவர்கள் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெறும் என்பதில் சந்தேகமில்லை அதனால் உள்ளூராச்சி தேர்தலில் அதிக சபைகளையும் மாகாண தேர்தலில் சபையை ஆட்சி செய்யும் அது போல் இரு பாராளுமன்ற உறுப்பினரையும் கைப்பற்றி சமுதாயத்துக்காக போராடும் பலமுள்ள கட்சியாக மக்கள் காங்கிரஸ் இருக்கும் என்பதை அறிந்தவர்கள் இன்று அமைச்சர் றிசாத் அவர்களோடு அரசியல் செய்வதற்கு முயற்சி செய்கின்றனர் இதை அறியாதவர்கள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்
எனவே அதாவுல்லாஹ் அவர்கள் வானத்தில் ஏறி வை கூண்டம் காட்ட முயழாமல் இந்த சமுதாயதின் எதிர்கால நலன் கருதி விரும்பினால் அமைச்சர் றிசாத் அவர்களோடு இனைந்து அரசியல் செய்ய வேண்டும் அல்லது அமைச்சர் றிசாத் அவர்களை விமர்சனம் செய்வதை கைவிட வேண்டும்.